Followers

Saturday, 3 December 2016

ஊடுருவும் பார்வை

ஊடுருவும் பார்வை
சுவை பார்க்கும் நாக்கு
சிந்திக்கும் மூளை
செயல்படும் கை
தொடர்ந்து ஓடும் குருதி
துடிக்கும் இதயம்
இடம் விட்டு நகர உதவும் கால்கள்
கேட்டு அறியும் செவிகள்
இன்னபிற அங்கங்கள் பெற்றாய்
இவைகளைக் கொண்டு வாரிசுகளையும் உருவாக்கினாய்
இவைகளை உமக்களித்த இறைவனுக்கு நன்றி செய்து அவனைத் தொழுதாயா !
அங்கங்கள் செயல்பட உலகில் உலாவருகின்றாய்
அங்கங்கள் செயல்படும் திறனை இழக்க இருந்த இடத்தில் மூலையில் முடங்குகின்றாய்

Monday, 15 August 2016

நிம்மதியான தூக்கம்

ஆய்வின்படி விடிகாலை (பஜர் தொழுகை) நேரம் உடலுக்கு ஆரோக்யமானது
இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை
தூக்கம் நமக்கு கிடைத்த இறைவனது அருட்கொடையில் மிக முக்கியமானது .
குழந்தையின் தூக்கம் கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.காரணம் பிறந்த குழந்தைக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகின்றது
தூக்கம் நமது இழந்த சக்தியினை மீட்டு அடுத்த நாள் உழைக்க பலுவினை தருகின்றது .
சிலருக்கு தூக்கம் குறைவாக இருக்கலாம் அதனால் அவர் அதற்காக அதே சிந்தனையில் இருக்கக்கூடாது .அந்த எண்ணம்தான் அவர் உடல்நிலையினை மிகவும் பாதிக்கும்.. தூக்கம் இல்லாமல் எந்த மனிதனும் வாழ முடியாது . நிம்மதியான தூக்கம் இல்லை என்றாலும் அவரை அறியாமல் பூனைத் தூக்கம் அவருக்கு கிடைத்திருக்கும் .

தூக்கமற்ற நிலை தொடர் கதையானது


தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்
துயரம் வந்ததால் தூக்கம் வரவில்லை
துயரத்தைப் போக்க வயிறு நிறைய உணவு
நிறைய உண்டதால் அயர்வு
அயர்வு வந்ததால் சோர்வு
சோர்வைப் போக்க தேனீர்
சோர்வு போனதால் கணினியில் நோட்டம்
கணினியில் முகநூலில் பார்வை
முகநூலைப் பார்க்க இரவு பகலானது
பகலில் பரபரப்புடன் அலுவலகம் நோக்கி ஓட்டம்
அலுவலகத்தில் அயர்வு அடைய
இரவில் தூங்காமல் இருந்ததால்
அலுவலகத்தில் பூனைத் தூக்கம்
தூக்கத்துடன் வேலை பார்த்ததால் தவறுகள்
தவறுகள் மேலாளரிடம் திட்டலை வாங்கித் தந்தது
மேலாளரிடம் திட்டல் பெற்றதால் தூக்கம் தொலைந்தது
மேலாளர் திட்டியதால் வீட்டில் கோபம்
வீட்டில் கோபம் வந்ததால் இரவில்
தூக்கமற்ற நிலை தொடர் கதையானது

தூக்கம் இல்லையென்பது வியாதியல்ல
தூக்கம் இல்லையென்று கவலையடைவதே வியாதியானது

Monday, 1 August 2016

கேள்விக்கு என்ன பதில்!

மூன்று வயது குழந்தை கேட்ட கேள்வி மகிழ்வாய் இருந்தது ஆனால் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் இருந்தது மனதிற்கு வருத்தமாக இருந்தது.
கேள்வி கேட்க குழந்தைகளுக்கு சரியான அதன் அறிவுக்கு ஏற்றதுபோல் பதில் சொல்வது குழந்தைகளின் அறிவை வளர்க்கும்.
  குழ்ந்தை அதிகமாக கேள்வி கேட்பது அதன் தாய் அல்லது அதன் தந்தையிடமாகவே இருக்கும்.அதற்கு பாடம் சொல்லிக் கொடுக்க நாம் முயல்கின்றோம். ஆனால் அது கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லையென்றால் பேச்சினை மாற்ற முயல்கின்றோம் . பாச்சி, பாச்சி (பால்) என்று பசியுடன் பால் கேட்கும் குழந்தையை தாய்ப் பால் இல்லாத தாய் தன் பால் கொடுக்கும் காம்பினை பூச்சி பூச்சி என்று சொல்லி குழந்தைக்கு பயத்தினை உண்டாக்குவதனைப்  படித்திருக்கிறோம். சரியான பதில் சொல்லத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மறைமுகமாவது அதன் அறிவுக்கு ஏற்றது போல் சொல்லக் கூடிய அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும்.

Tuesday, 26 July 2016

குடும்ப கலாட்டாவுக்கு பல காரணங்கள் உண்டு ..


குடும்ப  கலாட்டாவுக்கு பல காரணங்கள் உண்டு .அதில் சில. .
கருத்து முரண்பாடு ஏற்படுவது.
உருவாகும் பிரச்சினைகளைப் பொருட்படுத்துவது.
குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்
வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.இல்லாத மனைவி .

குடும்பத்தில் அனைவரிடமும் அனுசரிக்காமலும் அன்புடனும் இல்லாமல் இருப்பது .
கூட்டு  குடும்பத்தில் குழந்தைகள் போடும் சண்டையில் இவர்கள் தலையிட்டு பிரச்சனையிணை அதிகமாக்கி அதனால் ஏற்படும்  விளைவு .
பணப் பிரச்சினைகளைப் பொருட்படுத்தும்  மனைவி
பொருள் வேண்டியும் மற்ற பிற காரணங்கலுக்காகவும் பொய் பேசியே வாழ்கையினை  ஓட்ட நினைப்பது

Wednesday, 6 July 2016

பெருநாள் கொண்டாட்டத்தில் பெண்களின் பங்கு கவணிக்கப்பட வேண்டியதொன்று!

முஸ்லிம் குடும்பத் தலைவிக்கு பெருநாள் வந்தால் வேலைதான் அதிகம்!
பெருநாள் கொண்டாட்டத்தில் பெண்களின் பங்கு கவணிக்கப்பட வேண்டியதொன்று!
பெருநாள் வருவது முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்வாகவே இருக்கும். காரணம் முஸ்லிம்கள் கொண்டாடுவதே முக்கியமாக இரண்டே பெருநாட்கள்தான்.
ஒன்று ஈகைத் திருநாளாக இருக்கும் ரமதான் பண்டிகை
மற்றொன்று தியாத் திருநாளாக இருக்கும் ஈத் பெருநாள் .
பலநாடுகளில் இஸ்லாமிய பெண்கள் பெருநாளைக்கு பள்ளிவாசலுக்குச் சென்று மகிழ்வோடு இறைவனைத் தொழுது வருவார்கள் .அந்த வாய்ப்பு தமிழ் நாட்டில் குறைவு . மார்க்கம் அனுமதிக்கப் பட்ட ஒன்றை இவர்கள் கடைபிடிக்காமல் வீட்டிலேயே தொழுது கொள்கின்றார்கள் .அந்த மகிழ்வான ஒன்று கூடும் வாய்ப்பினை இழக்கின்றார்கள்.
ஆண்கள் தொழுதுவந்த பின் வேண்டிய நண்பர்களை விருந்துக்கு அழைகின்றார்கள்.
பெண்களுக்கு பொதுவாக நாள் முழுவதும் வேலைதான்
பெருநாள் அன்று சமையலறையை விட்டு வெளியே செல்ல எந்த நேரமும் முடியாது .இந்த நிலையில் அவர்கள் எப்படி பெருநாளை கொண்டாட முடியும்