Sunday 14 April 2013

ஒளிமயமான வாழ்வை அடைய

  குழந்தை மனதில் களங்கம்  இருக்காது. குழந்தைக்கு கற்பிக்கும்போது அச்சமுட்டி எச்சரிக்காமல் அன்பு காட்டி நாம் சொல்லித்தரும் அறிவுரைகளை அது நேசித்து விரும்பி விளங்கும் வகையில் கற்பிக்க வேண்டும்.
 கட்டாயத்தின் மேல் செயல்படுத்தப் படும் திட்டம் வெற்றி பெற்றதாக தோன்றினாலும் அது நிலைத்து நிற்காது. கட்டாயப்படுத்தி குழந்தையை மனனம் செய்யச் சொல்லி நாம் எதிர்பார்த்தபடி முழுமையாக, நிறைவாக மதிப்பெண்கள் பெற்றாலும் வாழ்க்கை பாடத்தில் தோல்வியை அடைந்து விடும். விளங்க வைத்து நல்லதை கற்பிக்க அனுபவ அறிவும் பெற வெற்றிபாதையை நோக்கி நடைபோட்டு ஒளிமயமான வாழ்வை அடைய முடியும்      
  இறைவனை தொழுவது (வணங்குவது) ஒரு கடமையாக இருந்தபோதும் அது ஆழ் மனதில் இறைநேசம்  என்ற எண்ணம் இருக்க வேண்டும். இறைவன் தடுத்த செயலை செய்ய மாட்டேன் என்ற மனம் வர வேண்டும்.  நம்பிக்கையற்ற நிலையில் எவருக்கும் உண்மையான,நேசமான ஈடுபாடு கொள்ள முடியாது.

 இறை வணக்கம் என்பது மனதை சார்ந்தது. மனம் கசிந்து இறைவனை  நாடுபவனுக்கு உறுதிப்பாடும் பணிவும் உண்டாகி அதன் உண்மை தத்துவம் அவனுக்கு விளங்குகிறது.   இறைவணக்கம் அடுத்தவர் தூண்டுதலினால் வருவதை விட அதனை அறிந்து நேசித்து வரும்போது அது ஆழ் மனதில் நிலைத்து நிற்கும். அறிவுத்திறன் பலருக்கு இருக்கும். ஆத்ம பலம் சிலருக்குதான் இருக்கும். ஆனால் இறைவணக்கத்தால் எதையும் சாதிக்கலாம். என்ற நினைவோடு மட்டும் இருந்துவிடாமல் காரியத்திற்கான காரியங்களின் செயல்பாடுகளில் முழுமையாக கண்டறிந்து செயல் திறனில் ஈடுபடுவதோடு இறைவனின் அருளை நாடவேண்டும்.கடமையை ஒதுக்கி பலனை தேடுவதில் பயனில்லை.
ஒட்டகத்தைக் கட்டு பின்பு அதன் பாதுகாப்புக்கு இறைவனை நாடு - நபிமொழி
 Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]
  கடமையைச் செய்து விடவேண்டும் மற்றதை இறைவன் நாட்டப் படிதான் நடக்கும் என்ற மன உறுதி வேண்டும். திட்டப்படியே எல்லாம் நடந்து வருகிறது. அதில் நல்லதை எண்ணி உழைப்பிலும், பிழைப்பிலும் அவ்வப்போது இறைவனை தனக்குள்ளே வணங்குவதுதான் முறையான இறைவணக்கம்.



பறவைகள் போல்,  நாம் தேவையில்லாத கோபம், வருத்தம், வலி, பயம்  இவைகளை தூக்கிச்  செல்வதை தவிர்ப்போம்
வாழ்க்கை அழகானது ... அது தொடரட்டும்  ...

கட்டாயப்படுத்தப் பட்டு தொழ பழகிக் கொண்டவன் நிலையை அறிய ஒரு நிகழ்வு.
சிலர் ஒன்று கூடி ஓரிடத்திற்கு திருட புறப்பட்டார்கள். அதில் ஒருவன்  புறப்படுவதற்கு முன் இறைவனை தொழ ஆரம்பித்தான். அவன் தொழுது முடித்த  பின், உடன் இருந்தோர் கேட்டனர் ' நாம் செய்யப்போவது  திருட்டுத் தொழில் அது தவறான வழி அதற்கு ஏன் இறைவனை தொழுகிறாய்' எனக் கேட்டனர். அதற்கு அவன் சொன்ன பதில் ' இது எனக்கு சிறு வயதில் ஏற்பட்ட பழக்கம். என் தந்தை தொழவில்லையென்றால் அடிப்பார். அவருக்கு பயந்து தொழ ஆரம்பித்தேன். அது இந்நாள் வரை தொடர்கிறது . தொழாமல் சென்றால் ஏதோ ஒன்றை இழந்ததுபோல்  இருந்து என் வேலையில் கவனம் எற்படாமல் தவறு செய்து விடுவேன்' என்றான்.
பண்பு நெறியில் பாடம் பயில்க
புலவர் முஸ்தபாஅவர்களின் பேச்சு.

2 comments:

  1. 'அல்லாஹ் அடிப்பான், தண்டணை கொடுத்து விடுவான்' என்று பிள்ளைகளை நல்வழிப்படுத்த சொன்னபோது, அங்கிருந்த எனது நண்பரின் மனைவி, 'அல்லாஹ்வை தண்டிப்பவனாக குழந்தைக்கு அறிமுகப்படுத்தாமல் அவன் ஒரு தாயை விடவும் எழுபது மடங்கு அன்பானவன் போன்ற போன்றவற்றை கூறி அறிமுகப்படுத்துவது நல்ல விளைவைத் தரும்' என்று கூறினார்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான நிகழ்வோடு கருத்துரை தந்த சகோதரர் mohamed sultan அவர்களுக்கு மிக்க நன்றி

      Delete