Tuesday 23 April 2013

இறைவன் அறிவான் இதயத்தின் ஓசையை!

அவனது ஆக்கங்கள் அளவிலடங்கா
அவனது ஆக்கங்களை அவன் அறிவான்
அவனது ஆக்கங்களில் நானும் ஒருவன்
அவனது ஆக்கங்களை அவன் மறப்பதில்லை
அவனை அடிக்கடி நான் மறந்து விடுகிறேன்

நினைத்தது முடிந்தால் நம் திறமையின் விளைவு
நினைத்தது முடியவில்லையெனில் நம் விதியின் விளைவு
மகிழ்ச்சி வர வல்ல இறையோன் நினைவில்லை 
மகிழ்ச்சி மறைந்து துன்பம் துவட்ட இறைவனின் நினைவு


இறையோன் துதிபாட நாக்கு புரள்கிறது
இறையோனை துதித்த குரல் ஒலியாக ஓசையில் வருகிறது
இறையோனை துதித்தது மற்றவர் நமை இறையோனின் அடியானாகக் காட்ட
இறையோனை துதிபாடியது இதயத்தின் ஒலியாய் வந்த ஓசையல்ல

இசையோடு ஓசை கொடுப்பினும்
ஓசையை ஒலிபெருக்கி வைத்து கொடுப்பினும்
இசையும் ஓசையும் உயர்வாய் கொடுப்பினும்
இறைவன் அறிவான் இதயத்தின் ஓசையை


நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள் [குர்ஆன் 10:44]

பிறப்பதும் இறப்பதும் உன் செயலாலே.. நீடூர்.S.E.A. முகம்மது சயீத் அவர்கள் எழுதிய பாடலை தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் பாடுகிறார் .

2 comments:

  1. தனக்குத் தானே எல்லாவற்றையும் செய்து கொள்வதை தான் அறிந்தாலே போதும்... அந்த நிலை வர மனம் பக்குவப்படவும் வேண்டும்...

    ReplyDelete
  2. திகைத்துப் போகிறேன் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் திறமையான
    சுறு சுறுப்பைக் காண . கட்டுரை போட்ட உடன் வரும் கருத்துரை கண்டு .உள்ளம் உவகை கொள்கிறது .மகிழ்வோடு நன்றி தெரிவிக்கிறது . நான் அறிவேன் அனைத்திலும் நீங்கள் காட்டும் செயல்பாட்டினை. வாழ்த்துகள்

    ReplyDelete