Wednesday 24 April 2013

அதனை படித்த பாவத்திற்கு என்னையறியாமலேயே நானும் உள்ளாக்கப் பட்டு விட்டேன்.





உயரிய சொல் உயர்த்திவிடும்
தகாத சொல் தாழ்த்திவிடும்
கிண்டலாக சொன்னால் கீழ்மைப் படுவாய்
கேட்பதும் சொல்வதும் உயர்வாக இருக்கட்டும்

அன்பாகச் சொல்
பணிவாகச் சொல்
பரிவாகச் சொல்
பாசத்தோடுச் சொல்

உண்மையைச் சொல்
உயர்த்திச் சொல்
உயர்ந்ததை சொல்
உயர்வடையச் சொல்

சொல்வது பட்டுபோல் இருக்க வேண்டும்
சொல்வது நெஞ்சத்தை வருடி விட வேண்டும்
சொல்வது அழும் குழந்தையை அரவணைப்பது போலிருக்க வேண்டும்
சொல்வது குறையை சுட்டிக் காட்டி சுருளச் செய்யாமல் சிந்திக்க வைக்க வேண்டும்

பெண்களைப் பற்றியோ அல்லது ஒரு மார்க்கத்தைப் பற்றியோ சிலர் எழுதும் வரிகள் மனதை பாதிக்கிறது .படிக்க மனம் வருந்துகின்றது . அது மனித சமுதாயத்திற்கு களங்கம் தருகிறது .ஒற்றுமையை உடைக்கிறது . தவறான கருத்துரையும் தராதீர்கள் தவறான வரிகளை தயவு செய்து போடாதீர்கள் ..இம்மாதிரி வரிகளை உடன் நீக்குவது நன்மை . உங்களால்தான் இதனை நான் படிக்க நேர்ந்தது .அதனை படித்த பாவத்திற்கு என்னையறியாமலேயே நானும் உள்ளாக்கப் பட்டு விட்டேன். தவறு செய்பவர்களை திருத்துங்கள்.கடினமாக திருத்த முற்பட்டால் அறிவு பூர்வமாக செயல்படுங்கள் .முள்ளை முள்ளால்தான் களையெடுக்க வேண்டும். அது முள்ளில் மாட்டிய துணியை எடுப்பதுபோல் இருக்க வேண்டும்

1 comment:

  1. அருமையாக சொல்லி விட்டீர்கள்...

    /// முள்ளில் மாட்டிய துணியை எடுப்பதுபோல் இருக்க வேண்டும் ///

    உண்மை... இல்லையெனில் நாம் மாட்டிக் கொள்ள நேரிடும்...

    ReplyDelete