Wednesday 3 April 2013

அரசியல் உறுதிப்பாடு அற்ற நிலையில் எந்த நாடும் முன்னேற்றத்தை அடைய முடியாது.

இன்றைய அரசியல் நாளைய சரித்திரமாக உருவாகிறது
 ஒவ்வொருவரும் அரசியல் அறிவை பெற்றுக் கொள்வது அவசியமாகின்றது
அடிப்படை அரசியல் அறிவைக் கூட அறியாமல் அரசியலில் ஈடுபட்டு அரசியல் அறியா மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி மன்றத்திற்கு வருவோர்களால் மக்கள் அவதிப்படுவதனை பார்க்க முடிகின்றது. இதனால் மக்களாட்சி முறையே வலுவற்றுப் போகின்றது.அரசியல் அறிவைப் பெற மக்கள் பெற்ற வாழ்க்கை அனுபவம் மட்டும் நிறைவைத் தந்துவிடாது . மக்களுக்கு போதிய கல்வியும் அதன் வழியே கிடைக்கும் நேர்மையும் ,ஒழுக்கமும் சட்டத்தை மதிக்கும் பண்பாடும்  பெற வேண்டும். ஆட்சி செய்வோர் அத்தகைய திறனைப் பெற்றவராக தெரிந்தெடுப்பதில் வாக்களிப்போருக்கு அரசியல் அறிவு அவசியமாகின்றது .

  அரசியல் உறுதிப்பாடு அற்ற நிலையில் எந்த நாடும் முன்னேற்றத்தை அடைய முடியாது. சிங்கப்பூர் அரசியல் உறுதிப்பாடினால் உயர்நிலையை அடைந்திருப்பதை நாம் அறிகின்றோம். அந்த நிலை நம் அருகில் உள்ள பல நாடுகள் பெறாத காரணத்தால் மேன்மை அடைய முடியாமல் உள்நாட்டுப் பிரச்சனையால்  சீரழிவதனைக் நாம் காண்கின்றோம்.பாக்கிஸ்தான் ,இலங்கை,பர்மா இவைகள் இதில் அடங்கும். பல  இன ஐக்கியத்திற்குப் முக்கியத்துவம் கொடுக்காத நிலையால் அந்த நாடுகள் முன்னேற்றம் அடைய முடியாமல் திணறுகின்றன
 இந்த நிலையை நம் நாட்டிலும் உருவாக்க சில அரசியல் ஊடுருவிகள் முயல்வதை அவசியம் தடுத்தாக வேண்டும். அதற்கு அரசியல் அறிவு அவசியம் தேவை.

 நெடுங்காலம் அரசியல் உறுதிப்பாட்டுடன் விளங்கி வரும்  சிங்கப்பூரில் விரைவான பொருளாதார் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதற்கு வலுவான தலைமைத்துவமும் மக்களின் கடின உழைப்புமே காரணம்.இந்த இரண்டு சிறப்புகளையும் பெற்றிராததால் தான்  வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் பல தலை தூக்க முடியாத நிலைமையில் இன்று  இருந்து  வருகிறது.
   வளச்சி  வரும் ஆசிய நாடுகளுக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த முன்னோடியாக திகழ்கிறது. அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.சிங்கப்பூரில்  நிலவும் பல  இன மக்களின் ஒருமைப்பாடு தண்மை  வெகுவாக கவரக்  கூ டியது.
    சிங்கப்பூரில் பல இன மக்கள்  வாழ்ந்துவரினும் அரசியல் சமுதாய நீதி  ஆக்கியவற்றை தலைமைத்துவம் வழுவாது பேணி வருவதால் இங்கு இனவாத பிரச்னைக்கு என்றுமே இடமிருக்காது,  சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் சாசனத்தின் மூலம் உத்தரவாதமளிக்கக் கூடிய முற்போக்குக் குடியரசாக   சிங்கப்பூர் விளங்குகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் கொண்டு சில நாடுகளில் இன ஐக்கியம்  ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது.

     நாட்டு நடப்புகளை  மக்கள் நன்கு உணர்ந்தவர்களாக இருப்பது அவசியம்
உழைத்து முன்னேற   விரும்பும் செயல் வேகம் மக்களிடம் மேலோங்கி நிற்க வேண்டும் அரசும் அதற்கு வேண்டியதை அவசியம் செய்ய வேண்டும். வேலை வாய்ப்புகளை பரவலாக்கப் பட வேண்டும். இனாம் பொருளை கொடுத்து மக்களை வழிகெடுக்கும் தன்மை மக்களை செயலற்றவர்களாக்கிவிடும் .இதனால் வெற்று  அரசியல் முழக்கங்களுக்கு  இடமேற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment