Monday 1 April 2013

நன்மையை ஏவு தீமையைத் தடு

சமூகச் சீர்திருத்தத்தை செய்
கடமை காத்திருக்க நழுவுவதேன்
பணி  செய்வதே நம் கடமை
செயலின் எல்லையை விரிவாக்கிக் கொள்
சேவையின் சொல்லை   நயமாக்கிக் கொள்
நோக்கம் நன்மையாகி சேவை விரியட்டும்
தனி மரம் தோப்பாகாது
தனி  மனிதன் சமூகமாக முடியாது
நாம் நிம்மதியடைய சமூகம் வேண்டும்
சமூகத்தின் நிம்மதியில் நமக்கும் பங்குண்டு
சமூகம் நமக்கு என்ன செய்தது என நினையாமல்
சமூகத்திர்க்கு நாம் அளித்த பங்கென்ன நினைத்தல் உயர்வு
சமூகத்தில்  நம் சேவையும் தேவை
சிறு துளி பெரு வெள்ளமாகும்
நாமும் அதில் ஒரு துளி

தடுக்கி விடும் கல்லை ஓரத்தில் நகர்த்துவதும்
தடுக்கி விடும் கல்லை போடவருபவரை நிறுத்துவதும்
தர்மச் சேவையில் அடங்கும்
ஆரம்பம் நம்மிடத்தில் தொடரட்டும்
மேன்மை பெரிதாக பரவட்டும்
சொலவதை சொல்
செய்வதை சொல்
சொல்வதும் செய்வதும் நன்மை பயக்கட்டும்
ஆலோசனை அறிவாக இருக்கட்டும்
அறிவு உயர்வாக இருக்கட்டும்
மனதே சொல்லும் மேன்மையை
மனது மேன்மையடைய மார்க்கத்தை நாடு
பானையில் உள்ளதே அகப்பையில் வரும்
அறிவில்  உள்ளதே வெளியில் வரும்
அறிவைப் பெருக்க அறிஞர்களை நாடு
நாடியவர்களிடம் நன்மையைப் பெறுவாய்
சிந்தி ஆழமாக சிந்தி
சிந்தித்ததை சிதறவிடாதே
சிந்தித்ததை கோர்வையாக்கி மாலையாக்கு
மாலையைப் பெற்றவர் மகிழ்வடைவர்

கற்பனையில் காலம் போய் விடும்
செயலில் காலம் சிறந்துவிடும்
மேம்படுத்தும் செயல் மேன்மை பெற்று விடும்
பொல்லாங்குப்  பிரச்னை தூளாகி விடும்
உனக்குள் ஒரு ஒளி ஒலிந்திருக்கிறது
ஒலிந்ததை வெளிக் கொணர்ந்து ஒளிமயமாக்கி விடு
ஒளி உனக்கும்  மற்றவருக்கும் வழி காட்டும்

No comments:

Post a Comment