Saturday 27 April 2013

பெண்களின் திருமண வாழ்வின் முக்கியத்துவம்

விதவையான மங்கைக்கு மறுமணம்

மனைவி இறந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்ள முதுமை அடைந்தவனும் துடிக்கின்றான். ஆனால் இளம் பெண்ணாக இருக்கும் போதே விதவையான மங்கைக்கு மறுமணம் செய்ய உரிமை கிடையாதே என்ற வேதனையில் தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படிப் பாடினார்.

விதவைகளுக்கு மறுவாழ்வு
புரட்சி“மறுமணம்”
கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா. மிகக் கொடிய தென்று பட்டதண்ணே. குளிர்கின்ற வட்டநிலா”
புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் மனக்குமுறலுடன் பாடிய கவிதை இது.

‘தேடிகன்ற அன்றிலை போல் மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல் செய்ய பெண் கேட்கிறான்.
வாடாத பூப் போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ!’
இது போல அறிஞர்கள் பலர் விதவைத் திருமணங்களை சமுதாயத்திற்கு இருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை மக்கள் ஏற்க வேண்டும்.

இறைத்தூதர் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது முதல் திருமணத்தை கதீஜா பிராட்டியார் (ரளியல்லாஹு அன்ஹா) என்ற விதவையுடன் செய்து கொண்டார்கள்



 அயல் நாட்டில் திருமணத்திற்குக் காத்து இருப்போர் விரும்புவது. இந்திய பெண்ணாக அதிலும் தமிழ்நாட்டு பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் .தனிழ் நாட்டுப் பெண்  கூட்டு குடும்பத்தில் வாழ்ந்ததினால் குடும்ப பாங்குடன் நடந்து கொள்வாள்.என்ற கருத்து .மேலை நாட்டில் வாழ்ந்த பெண்களிடம் இதனை பார்ப்பது அபூர்வம் .

பெண்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்பதால் அவர்களிடம் கண்ணியத்தோடும் மனிதாபிமானத்தோடும் நடந்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உரிமையினை முறையாக வழங்குவது ஆண்களின் கடமை.

 சீன ஏழை விவசாயி தன் மனைவியுடன் கடுமையாக உழைத்து பணம் ஈட்டி செல்வந்தன் ஆன பின் கடுமையாக வயலில் உழைத்ததினால் அவனது மனைவியின் அழகு குறைய அவன் வேறு பெண்ணை நாடி செல்கின்றான் . அவனது  மனைவி மிகவும் மன வேதனை அடைகின்றாள்.
பள்ளிக்கூடம் செல்லும் தன் மகளுக்கு சூ  மாட்டி விடும்போழுது அந்த பெண் குழந்தை வலி தாங்காமல் கதறுகின்றாள் .அப்பொழுது தாய் சொல்லும் வார்த்தை “மகளே  இந்த  வலியினை தாங்கிக் கொள் உனக்கு திருமணம் ஆன பின் உன் கால் அழகாக இல்லை என்று உன் கணவன் உன்னை விட்டு பிரிந்தால்  அந்த மன வலியினை உன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என  அழுகின்றாள்.  அந்த காட்சியினை நம்மாலும் தாங்க முடியாது

பெண்களை அவர்களின் அழகுக்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்துவிடலாம்; அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களின் செல்வம் அவர்களை தவறச் செய்திடலாம்; நல்லொழுக்கத்திற்காக அவர்களை மணமுடியுங்கள்; நல்லொழுக்கமுள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள பெண்ணைவிட) மேலானவள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி) நூல்: இப்னு ஹிப்பான், அஹ்மத்)


No comments:

Post a Comment