Saturday 25 May 2013

ஊக்கமுடையோர் இடையூறுகளுக்கு அஞ்சிட மாட்டார்கள்.

  நல்ல கருத்தை ,கவிதையை விரும்பி படிக்க நமக்குள் ஒரு பொறி தட்டுகிறது. அது நம்மை உருவாக்குகின்றது .நம்மையும் அதைவிட சிறப்பாக எழுதத் தூண்டுகின்றது. நமக்குள் ஒளிந்துக் கிடப்பதனை நாம் அறியோம் .நம்மை நாமே நாம் அறிந்து விட்டால் நாம் ஞானி

  மற்றவர் நல்ல கருத்துகளை சுயமாக சிந்தித்து சிறப்பாக நயம்பட தருகின்றார்களே நாம் மட்டும் அடுத்தவர் கருத்தை போடுகின்றோமே என்ற வருத்தம் வேண்டாம்.  சொல்லியவர் ,எழுதியவர் ,உரிமையாளர் பெயரையும் சேர்த்து விடுங்கள் .அது இருவருக்கும் அறிவைப் பகிர்ந்த நன்மையை கொடுத்து விடும். காப்புரிமை இப்பொழுது வந்ததுதான்.சங்க இலக்கியங்களுக்கு காப்புரிமை இருந்திருந்தால் தமிழ் மறைந்திருக்கும்.


 முகநூல் எனக்கு ஒரு குறிப்புத்தாள்.அது கடினமானதாகவும் இருக்கும் .சிறு குறிப்புகளாக தந்து பின்பு நான் தந்த பல குறிப்புகளை பலவற்றை ஒன்று சேர்த்து ஒரு கட்டுரையாக வலைபூவில் மலராக தொடுப்பேன். கிடைத்ததை பயன்படுத்தி மனதில் பதிய வைத்து மணமாக்குவேன்.

ஊக்கமுடையவர்கள் இடையூறுகளுக்கு அஞ்சிட மாட்டார்கள்
நற்காரியங்களில் ஈடுபட ஏன் அஞ்ச வேண்டும்?
தவறு செய்வதில் ,பாவமான் செயலில் ஈட்டுப்பட அஞ்ச வேண்டும்
அஞ்சுவதற்கு அஞ்சு, அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை 

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து"   -திருக்குறள்

எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ்வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.
.- மு. வரதராசனார்

2 comments:

  1. /// அது இருவருக்கும் அறிவைப் பகிர்ந்த நன்மையை கொடுத்து விடும். ///

    இருவரும் உணர வேண்டும்...

    அருமையான கருத்துக்களுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. @ தங்கள் திண்டுக்கல் தனபாலன் and Aasai தங்க;கருத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete