Friday 19 July 2013

வழிவகுத்தது வளைகுடா நாடுகளின் திறப்பு !

ஊரெல்லாம் ஊர் சுற்றும் மணமாக வாலிபர்கள்
வீடெல்லாம் வயது வந்த மணமாகா கன்னிப் பெண்கள்

பெண்ணுக்கு மணமுடிக்க பொருத்தமற்ற வாலிபன்
பெண்ணுக்கு மணமுடிக்க வாடும் பெற்றோர்

வாலிபர்கள் வளம் பெற வழிகாட்டியது வளைகுடா நாடுகள்
வாலிபர்கள் படையாக புறப்பட்டனர் வளைகுடா நாடுகள் நோக்கி

வளைகுடா நாடுகளிலிருந்து வந்த வாலிபனுக்கு மரியாதை வந்தது
வளைகுடா நாடுகளிலிருந்து வந்த வாலிபனுக்கு பெண்ணை மணமுடிக்க விரும்பினர் பெற்றோர்

தேங்கிக் கிடந்த மணமாகாத பெண்கள் மணமுடிக்கப் பட்டனர்
ஊர் சுற்றும் மணமாக வாலிபர்கள் கூட்டம் குறைந்துப் போனது

வளைகுடா நாடுகளிருந்து விசாவோடு வந்த வாலிபனுக்கே பெண் தரும் காலம் வந்தது
வளைகுடா நாடுகளில் பொருள் ஈட்டியோர் தான் பட்ட சிரமத்தினை தம் பிள்ளைகள் பெற வேண்டாமென பிள்ளைகளை படிக்க வைத்து சிறப்பாக்கினர்

படிக்காத பெற்றோர் தம் பிள்ளைகளை படிக்க வைத்தனர்
படிக்காத  பிள்ளைகள் படிக்கத் தொடங்கினர்

படிக்காத  பிள்ளைகள் குறைவாகப் போனது
படிக்காத சமூகத்திர்க்கு அரசும் முன்னுரிமைத் தந்தது

படித்து வேலையில் பொருள் ஈட்டும் பையனுக்கே பெண் கிடைக்கும் காலமானது
படித்த பெண்ணே மணமுடிக்க வேண்டுமென படித்த பையன் விரும்பும் காலமானது

வரதட்சனை மறைய வழிவகுத்தது வளைகுடாவின் திறப்பு
கன்னிப் பெண்களுக்கு வாழ்வு தர வளைகுடா நாடுகளின் வளமும் காரணமானது

1 comment:

  1. வளைகுடா - சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete