Tuesday 13 August 2013

வாழ்வதற்கே வாழ்க்கை தரப்பட்டுள்ளது

இதயம் விடும் மூச்சில் இருப்பவர்கள் இருப்பார்கள்
இதயம் இருப்பவர்கள் உண்மையாய் வாழ்த்துவார்கள்

வற்றாத ஜீவ நதி வாழ்வை கொடுக்கும்
வற்றிய வறண்ட நதி வாழ்வை போக்கும்

இனிய இதயம் வாய்மை பேசும்
பொல்லாத இதயம் பொய்மை பேசும்

நீ விரும்பினால் நான் விரும்புவேன்
நீ விரும்பாவிட்டாலும் நான் விரும்புவேன்

நான் விரும்பினாலும் நீ விரும்புவதில்லை
நான் விரும்பாமல் போனதற்கு நீ காரணமில்லை
நான் விரும்பாமல் போனதற்கு நானே காரணமானேன்

விருப்பம் வர வேதனை நீங்கும்
விருப்பம் வர நட்பு வளரும்

வாழ விரும்பு வயதானாலும் வாழ விரும்பு
வாழ்கையை வசீகர மாக்கி வாழ்ந்து விடு

வாழ்வை போக்க வரவில்லை
வாழ்வதற்கே வாழ்க்கை தரப்பட்டுள்ளது

No comments:

Post a Comment