Sunday 18 August 2013

உன்னிலை நீ அறிய உன் முடிவின் காலமே பதில் சொல்லும்

பண பலம் தலைக்கனமாக மாறியதோ
அறிவின் பலம் தலை கனமாகுமோ!

கற்பித்தவரை காக்க வைப்பது கர்வமா !
கற்கப்பட்டதின் நோக்கின் கர்வமா !

பெருமை பேசுவதிலும் அடக்கமாக பேசி
பெருமையாக பேசி விளம்பரம் தேடுவது முறையோ!
நிகழ் கால நிகழ்வுகளை பெருமையாக தன்னிலை விளக்கி
கடந்த கால நிகழ்வுகளில் தன்னிலை மறந்தது மறதியோ !

உன்னிலை நீ அறிய உன் முடிவின் காலமே பதில் சொல்லும்
இன்னிலை நீ அறிந்து உன் முடிவை யாரிடம் யெடுத்து இயம்புவாய்

பொறுத்திரு பெருமையாகப் பேசியது அனைத்தும் மறக்கப் படுவதனை நீ அறிவாய்
அறியும் காலத்தில் அனைத்தும் அழிந்து போகும்
அறியும் காலத்தில் அனைவரும் வந்து போவார்
அறியா காலத்தில் அணைத்தவரும் விலகி நிற்பார்


1 comment:

  1. ஒவ்வொன்றும் உண்மைகள்...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete