Tuesday 1 October 2013

விழுதல் இயல்பு. விழுந்த வேகத்தில் எழுதல் அறிவு .


விதைகள் விழும்
விழுந்த விதைகள் வேர் விட்டு செடியாகும்

விழுதல் இயல்பு
விழுந்த வேகத்தில் எழுதல் அறிவு

செடிகள் வளர நீர் தேவை
மனிதன் அறிவு வளர முயற்சி தேவை

குழந்தையும் விழும் போது தன் முகமும் தலையும் அடிபடாமல் தன்னை பாதுகாக்கும்
மனிதன் விழுந்தால் தன்னை மாய்த்துக் கொள்ள முயற்சிகின்றான்

பாதுகாத்துக் கொள்ளும் செயல் யதார்த்தம்
மாய்த்துக் கொள்ளும் செயல் மனநோய்

வாழவே படைக்கப் பட்டோம்
வாழ்வை உயர்வாக்கிக் கொள்ளல் நம் கடமை

படைத்தவன் ஒருவனிருக்க
எடுத்தவனும் அவனாகத்தான் இருக்க வேண்டும்

நமக்கு கிடைத்தது அமானுத வாழ்க்கை
நமக்கு கிடைத்த வாழ்க்கையை உயர்வாக்கிக் கொள்ள வேண்டும்

நமக்கு கிடைத்த இடம் இளைப்பாறும் இடம்
நாம் இளைப்பாறு முன் நாம் சேவை செய்து நன்மையை சேர்த்துக் கொள்ள வேண்டும்

2 comments:

  1. விழுதல் இயல்பு
    விழுந்த வேகத்தில் எழுதல் அறிவு
    அருமை...!

    ReplyDelete
  2. "வாழவே படைக்கப் பட்டோம்
    வாழ்வை உயர்வாக்கிக் கொள்ளல் நம் கடமை"

    அருமையான பகிர்வு

    ReplyDelete