Thursday 3 October 2013

பாவ மன்னிப்பு

தெரிந்ததை சொன்னேன்
தெரியாததை சொல்லத் தெரியவில்லை

அறிந்த தவறுகள் பல
அறியாத தவறுகள் சில

சொல்வதையும் சொல்லாததையும் நீ அறிவாய்
செய்ததையும் செய்யாததையும் நீ அறிவாய்

மறந்ததை மறக்க நினைத்ததையும் நீ அறிவாய்
கடந்தவை கரைய செய்த தவறை மன்னித்து விடு

மறந்தும் இனி எத் தவறும் செய்ய மாட்டேன்
சிறந்து இனி இருக்க உன் அருள் வேண்டி நிற்ப்பேன்

 எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். (குர்ஆன் 2:160.)

 எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்து விட்டோம்; நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தோர்களாகி விடுவோம் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7:23)

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள்! நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்

 முச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவமன்னிப்பு கோரலை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: திர்மிதி

    நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (அல்குர்ஆன் 9:104)

    அல்லாஹ்விடம் (இறைவனிடம் )பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி திருந்தி வாழ முற்படவேண்டும்.

No comments:

Post a Comment