Tuesday 8 October 2013

தனிப்பட்ட ஒழுக்கம் நடத்தை

தனிப்பட்டவனாக வாழ வழியில்லை
தனிப்பட்டவனாக வாழ துடிக்கவில்லை
தனிப்பட்டவனாக வாழ்ந்து தழைக்க முடியவில்லை
தனிப்பட்ட மரம் தோப்பாக முடியாது

தனிப்பட்ட ஒழுக்கம் நடத்தையால் உயர்வடைகின்றது
தனித்து விடப்பட்ட மனம் சிந்தனையில் உட்படுகின்றது
தனித்த வாழக்கை மக்களை அறியாமல் சிதைகின்றது
தனித்து வாழ்பவன் மக்களால் ஒதுக்கப் படுகின்றான்

வீடு வேண்டும் மனிதருக்கு
கூடு வேண்டும் பறவைகளுக்கு
வீடு வேண்டாம் விலங்கினத்திற்கு
வீடு வேண்டும் மணம் செய்தோருக்கு

மணம் செய்தோர் வாழ விரும்புவர்
மணம் செய்தோர் பரம்பரை வேண்டுவோர்
மணம் செய்தோர்  மனம் விரும்பி நிற்ப்போர்
மணம் செய்து மனம் வெறுத்தோர் மாய்க்க நாடுவார்

மாய்க்க நாடுவோர் தற்குரியாவார்
மாய்க்க நாடுவோர் தன்னை உருவாக்கியவனை மறந்தவர்
மாய்க்க நாடுவோர் தான் போக்கிய உயிரை பெற முடியாதவர்
மாய்க்க நாடுவோர் தான் நாடியதெல்லாம் கிடைக்க நினைப்போர்

நாம் வாழ மற்றவரும் வாழ வேண்டும்
நாம் பெற்ற மகிழ்வும் மற்றவரும் பெறுதல் வேண்டும்
தானும் அழிந்து மற்றவரும் அழிய நினைப்போர் கெடுமதி கொண்டோர்
தான் பெற்ற இன்பம் பெருக வையகம் யென நினைப்போர் உயர்மதி கொண்டோர்

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது). ( குர்ஆன்- 24:27 )

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்த உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் தருவி ஆராயாதீர்கள். ஒட்டுக்கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.- புகாரி ஹதீஸ் 5143.

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
 - புகாரி ஹதீஸ்1.

2 comments:

  1. /// நாம் வாழ மற்றவரும் வாழ வேண்டும்...
    நாம் பெற்ற மகிழ்வும் மற்றவரும் பெறுதல் வேண்டும்... ///

    சிறப்பான எண்ணங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete