Thursday 28 November 2013

முழுமை எதில் உள்ளது !


 முழுமை எதில் உள்ளது ! முடிவின் இருதியே  முழுமையின்  துவக்கம்.  குறை  இல்லாத மனிதனைப் பார்க்க முடியுமா ! .குறையிலும்   நிறையினைக் காண்பவனே சிறந்தவன் . முழுமையாக கிடைக்கவில்லையயே என ஆதங்கப்படுவதைவிட கிடைத்ததைக் கொண்டு  நிறைவு அடைந்தவன் வாழ்வே மகிழ்வாக அமையக் கூடும் . தாகம்  தீர்க்க நீர் நாடி வேண்டுவோர்  கிடைத்த நீரைக் கொண்டு தாகத்தினை தீர வழி உண்டாக்கிக் கொள்வார்கள் . அதன் வேகம் படிப் படியாக குறைவதனை உணர்வார்கள் . எது தேவைக்கு  அதிகம் கிடைத்தாலும் அதன் மதிப்பு குறைவதனைக் காணலாம் . கடைத்தெருவில் பொருட்கள் அதிகம் வந்து சேர்ந்தாலும்  ஒரு பொருளின் விளைச்சல் அதிகமாகிவிட்டாலும் அதன் மதிப்பு குறைவாக போய்விடும் நிலை என்பது உண்மை . வாழ்வின் தத்துவமும் இதில் அடங்கும் .


 நாம் நினைத்தது  முழுமையாக கிடைக்காது  அப்படியே  அது கிடைத்து விட்டாலும்  அதன் சுவையை, மகிழ்வை நாம் அனுபவிக்க முடியாது . குறையும் நிறையும் உள்ளடக்கியதே வாழ்வின் மகத்துவம். திருமண வாழ்வும் அதைச் சார்ந்ததுதான். நம்மால் முடிந்தவரை  வாழ்வை மகிழ்வாக்கிக் கொள்ள  விட்டுக் கொடுக்கும் மனதுடன்  நல்லதை பாராட்டி கெட்டதை  மறந்து  சிறப்போடு  வாழ  முயல வேண்டும் . கணவனும் மனைவியும் முழுமையாக பிடித்தவர்ளாகாக ஒருபோதும் சிறப்பாக வாழ்வை அமைந்துவிட முடியாது. கிடைத்த வாழ்வை சிறப்பாகிக் கொள்ள முயல்வதே சிறந்த வாழ்வு . வாழ்க்கை என்பது பொருள் கொடுத்து வாங்கும் பொருளல்ல. அது மனதைச் சார்ந்தது.வாழும் முறையைப் பொருத்தது.

இறை நம்பிக்கைக் கொண்டு அவனைத் தொழுது வாழ்வோர் வாழ்க்கை மனதில் கசடை நீக்கி தெளிந்த நீரோடையாக வாழ்வின் ஓட்டமும் சிறப்பாக முடியும்

  திருமணம் செய்து கொண்டால் மனைவிக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் மற்றும் இன்றியமையா வசதிகளை, தன் சக்திக்கேற்ப செய்து கொடுப்பது கடமையாகும். இதே போல மனைவியும் கணவனின் தேவைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்; கணவனின் அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும்.

இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.

நீண்ட காலப் பிரிவு, இல்லற சுகத்தில் ஏமாற்றம், தம்பதியரிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமல் போவது, மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும் மரியாதையும் கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய கனிவும் அரவணைப்பும் குறைந்து காணப்படுவது.

1 comment:

  1. /// குறையும் நிறையும் உள்ளடக்கியதே வாழ்வின் மகத்துவம்... ///

    நல்லதொரு அலசல் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete