Thursday 7 November 2013

ஒரு காரணமுமின்றி ஒன்றையும் இறைவன் படைக்கவில்லை.

ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிறது .
ஒன்றிலிருந்து ஒன்று உருவாகுவது உயர்வானதாகவும் இருக்கலாம்  .


சுழிக்கு (பூஜ்யம் 0) மதிப்பு இருப்பதனால்தான் சுழியை கண்டு பிடித்தார்கள். ஒன்றோடு சுழி சேர சுழிக்கும் மதிப்புதான்.
எதனையும் ஒதுக்க வேண்டாம். ஆய்வு ,சேர்ப்பு ,மெருகு தர மதிப்பு தானே உயரும்
பூஜ்யத்தை கண்டுபிடித்தது இந்தியர்கள்

அல்ஜிப்ரா என்ற கணித வழக்கு அராபியர்களால் உருவாக்கப் பட்டதாக சொல்வதுண்டு .

அரேபிய புகழ்பெற்ற கணித மேதை அல்-குவரிழ்மி (790 கி.பி. - 850 AD) இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்து
 "ஹிஸாப் -அல் ஜாபர், வ -அல்முகாபிலா " (“Hisab-al-jabr-wa-al-muqabilah”)என்ற .பிரபலமான புத்தகம் எழுத  இந்திய எண் முறை இயற்கணிதம் பிரபலமானது.

ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றை உருவாக்கி
ஒன்றிலிருந்து பலவற்றை உருவாக்க முடிந்தது ஒருவனால்
ஒருவனாக இருந்த ஒரிறைவன் பிரபஞ்சத்தை உருவாக்கினான்
ஒன்றுமில்லாதது ஒன்றுமில்லை இந்த உலகத்தில்

தான் ஒரு சுழி
தான் ஒன்றுமே பெற்றிருக்கவில்லை யென்பான்
தான் பெற்றிருப்பதை அறியாதவன்
தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவன்
தன்னை மறந்தவன்
தன்னை படைத்தவனையும் மறந்தவன்

No comments:

Post a Comment