Tuesday 17 December 2013

எதிலும் அவசரம்

பட்டாம் பூச்சி பறப்பதில் அழகு
பட்டாம் பூச்சி நிறமும் அழகு
பட்டாம் பூச்சி கூடு கட்டுவதும் அழகு
பட்டாம் பூச்சி தன் வேலையை தானே செய்வதும் அழகு

அந்த அழகை கண்டு ரசிப்பதும் அழகு
அது கட்டிய கூட்டில் உள் நுழைவதும் அழகு
அது நுழைந்த கூட்டில் வெளி வராமல் தவித்ததில் வருத்தம்
அது நுழைந்த கூட்டிலிருந்து வெளி வர கத்தரியால் அதன் கூட்டை கத்தரியால் வெட்டி பெரிது படுத்த அது வெளிவர அதன் மீது காட்டிய பரிவில் மகிழ்வு


அதன் கூட்டை பெரிது படுத்த முயல்கையில் அதன் இறக்கையில் சிறிது பாதிப்பு வர அது பறக்க முடியாமல் தவித்ததில் வேதனை

நல்லது நிகழ விரும்பி தவறாகப் போனதில் குற்ற உணர்வு
உதவி செய்வதில் அவசரம்
உதவி செய்வதில் அவசரம் வர அறிவு மங்கிப் போனது
பட்டாம் பூச்சியின் கூடு குச்சிகளில் சிறிது எண்ணை தடவி இருந்தால் அது இளகி பட்டாம் பூச்சி தானே வெளியே வந்திருக்கும்
பட்டாம் பூச்சிக்கு உடல் சுருங்கி விரியும் ஆற்றலை இறைவன் தந்துள்ளான்
பட்டாம் பூச்சி தன் கூட்டில் மாட்டிக் கொண்டு தவிக்கிறதோ என்ற பதட்டத்தில் வந்த தவறான கண்ணோட்டம்.
தவறான கண்ணோட்டம் தவறான கருத்தை உருவாக்கி பிழை செய்ய வைத்து விட்டது
http://nidurseasons.blogspot.in/

No comments:

Post a Comment