Monday 20 January 2014

அளவுக்கு அதிகமான நம்பிக்கை !



நம்பிக்கை நன்மைகள் தரலாம்

சில நேரங்களில் அதீத நம்பிக்கை பயன்தரலாம்.

அதீத நம்பிக்கையால் வாழ்க்கையை தீவிரமாக்கிக் கொண்டு வாழ்வைப் பற்றியே  தேவையில்லாமல் சிந்தனையால் வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வதும் உண்டு .

வாழ்க்கையை லட்சியமற்றதாக பொருபற்றதாக்கிக் கொண்டு பல இழப்புகளையும் அடைவதும் உண்டு

தன்னைப் பற்றி நினைக்காமல்,தன்னைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்! என்பதே சிலரது நினைப்பில் இருந்துக் கொண்டே இருக்கும். இதனால் செயல்கள் நடைபெறாமல் போகலாம்.


தன் சிறந்த திட்டங்களை, தன் சிந்தனைக்கு முக்கியத்துவம் தராமல்,  அடுத்தவர் ஆலோசனையால் முடிவுகள் எடுக்கப் பட முடியாமல் பல இழப்புகளையும் அடைவதும் உண்டு.

ஆலோசனை கேட்க வேண்டியவர்கள் அதற்க்கு தகுதியுடையவர்களாகவும்,நம்பிக்கை மற்றும்  நம்மீது நலம் கொண்டவர்களாகவும் இருத்தல் அவசியம். 

தம் மீது நம்பிக்கை அற்ற நிலை. தன்னை தாழ்த்திக் கொள்ளும் மனோநிலை 

ஒரு வினை முடிந்த பின்பு அடுத்தவரால் தமக்கு பாதக வினை வந்ததாக அடுத்தவர் மீது குற்றம் சாட்டி தன் செயலை நியாயப் படுத்திக் கொள்வார்கள்.

 தவறு நம்மிடமிருக்க குற்றத்தை  அடுத்தவர் மீது சுமத்துவர்

தன திறன் அறியாது செயல்பட்டு பலன் கிடைக்காமல் போக விதியாக நினைத்து புலம்புவர்.

இறைபக்தி உள்ளவர் தன் செயலின் முடிவை சமநிலையோடு கருதி அமைதி அடைவர்

No comments:

Post a Comment