Wednesday 19 February 2014

வேண்டாம் இந்த வீண் வம்பு என்பது அறிவுரையாகப் போனது.


ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்தபோது அந்த இடத்தில இருந்து இறந்தவர்கள், காவல் உதவியாளர்கள் மற்றும் பலரை மக்கள் மறந்து விட்டார்கள் அவர்களும் மனிதர்கள்தான்.ஒவ்வொரு உயிரும் உயர்வானது .இறைவன் கொடுத்த உயிரை மற்றவர்கள் மாய்க்க நினைப்பது தவறு.இறைவன் இயற்றிய சட்ட முறை உயர்வானது மற்றும் நாட்டின் சட்டமும் மதிக்கத் தக்கது .அவைகளை பேணி நடக்க மக்களுக்கு பாதுகாப்பும் உயர் வாழ்கையும் கிடைக்கும் .மனிதன் இயற்றிய சட்டத்தினை மனிதன் மாற்ற முடியும் .இறைவன் தந்த சட்டத்தை மனிதனால் மாற்ற முடியாது. இறைவனது நம்பிகையும் அவனது சட்டமும் மனிதனின் மாண்பில் உள்ளத்தில் இருக்க மக்கள் வாழ்வு உயர்வடையும்


இங்கு கிளிக் செய்து படியுங்கள்


இதனையும் கிளிக் செய்து படியுங்கள்
------------------------------------------------------------------------------


கருத்து சொல்லலாமா?
விவாதம் செய்யலாமா !
வேண்டாம் இந்த வீண் வம்பு என்பது அறிவுரையாகப் போனது.

வீட்டில்
உறவில்
அனைவரும்
விரும்புகிறார்கள்

அதனால்
நீ விரும்பியே
ஆக வேண்டும்

நீ விரும்பவில்லை என்றால்
நீ பாதிக்கப் படுவாய்

உன் உள் மனதைப் பற்றி சிந்திக்காதே
சிந்தித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாதே

'ஆமாம் ' போட்டு போய்க் கொண்டே இரு
'ஆமாம் 'போடுபவர்கள் அனைவரும் விரும்பிப் போடுவதில்லை
'ஆமாம் ' காலத்தின் கட்டாயம்

உனக்கு திருமணம் செய்விக்க யாரும் வரமாட்டார்கள்
உனக்கு பெண்ணும் கிடைக்காது துன்பப் படுவாய்

ரோம் நாட்டில் இருக்கும்போது ரோம் நாட்டுககாரனைப் போல் வாழு

நம் நாட்டிலும் அதையே கடைபிடி

இப்படி சிலர் எனக்கு அறிவுரை சொன்னார்கள்
நானும் ஆமாம் ' போட்டு நகர்ந்தேன்
நமக்கேன் இவர்களோடு விவாதம்

1 comment:

  1. வீண் விவாதம் தேவையில்லை... இணைப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete