Monday 24 March 2014

சிந்தித்து செயல்படுவோம்

நேற்று நேசித்தாய்
இன்று நேசிக்கவில்லை

இன்று ஏன் நேசிக்கவில்லை !
நேற்று இருந்தது போல் இன்று நீ இருக்கவில்லை

நேற்றுக்கும் இன்றுக்கும் என்ன மாற்றம் கண்டாய்
நாளைக்கு ஒரு சட்டையை மாற்றுவதுபோல்
நாளைக்கு ஒரு கொள்கையை மாற்றுகிறாய்

அறிவு வர கொள்கையை மாற்றுவது இயல்புதானே
அறிவை அடமானம் வைத்து கொள்கையை மாற்றுகிறாய்!

அவசியம் வரும்போது அடமானம் வைப்பதில் தவறு இல்லையே!
கொள்கை அடமானம் வைக்கப்படும் பொருளாகுமா !

ஆதாயம் கிடைக்கும் போது கொள்கையை பிடித்துக் கொண்டால் வளர்ச்சி வருமா !
ஆதாயமும், கொள்கையும் அடுத்தவரை பாதிக்கும் நிலையை உருவாக்குகின்றதே

'அரசியலில் இதெல்லாம் சகஜம்' என்று சொல்கின்றார்களே.
அப்படி சொன்னவர்கள் இருக்குமிடம் இல்லாமல் போவதனைப் பார்க்கவில்லையா!

எல்லோரும் ஒரு காலத்தில் இல்லாமல்தான் ஆகப் போகிறோம்
எல்லோரும் நம் வாரிசுகளை உருவாக்குவது தெரியவில்லையா!

நாமும் நம் சந்ததியரும் நன்றாக இருக்க நலல் கொள்கையை உருவாக்குவதும் அதனை பின்பற்றுவதும் அவசியமில்லையா!

அதற்கு என்னதான் செய்வது !
கற்பதும் ,சிந்திப்பதும் நல்ல கொள்கைகளை பின்பற்றுவதும் அவசியம் .
அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதோடு இல்லாமல் நம் அறிவை வளர்த்து நேர்மைக்கும் நன்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தவறான வழி காட்டுபவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து சான்றோராக மனித நேயத்திற்கு முக்கியம் கொடுத்து வாழ வேண்டும் மற்றும் அம்மேன்மக்களை ஊக்குவிக்க ஆவன செய்தல் வேண்டும் . அதற்க்கு சரியான நன்மக்களை தெரிவு செய்ய வேண்டும் .
அவ்வகையான சந்தர்ப்பம் இப்பொழுது வரும் தேர்தலும் ஒரு முக்கியமாக உள்ளது .
சந்தர்ப்பவாதிகளை கொள்கையற்றவர்களை தேர்ந்தெடுக்காமல் சேவை செய்யும் நன்மக்களை தேர்ந்தெடுப்பது நமது கட்டாய கடமையாகும் .
சிந்தித்து செயல்படுவோம்

No comments:

Post a Comment