Monday 28 April 2014

அவளை மணமுடிக்க நினைத்தேன்! அவள் மற்றவனுக்கு மணமுடிக்கப் பட்டாள்!

நம்பிக்கை வாழ்வின் பிடிப்பு
நம்பிக்கைக்கு ஆதாயம் தேடி அலைவதும்
நம்பிக்கைக்கு ஆதாரம் தேடி அலைவதும்
நம்பிக்கையின் பிடிப்பை போக்கும்

நம்பிக்கை பெறுதல் மகிழ்வானது
நம்பிக்கை பெற்று பலன் அடைதல் வேண்டும்
நம்பிக்கை பெற்றோருக்கே மார்க்கம்
நம்பிக்கை அற்றோர்க்கு மார்க்கமில்லை

நினைத்ததெல்லாம் நடப்பதில்லை
நடக்காதென்ற நினைவோடு முயற்சிப்பதில்லை
முடிக்க நினைத்தது ஒன்று
முடிந்தது நினைக்காத ஒன்று

அவளை மணமுடிக்க நினைத்தேன்
அவள் மற்றவனுக்கு மணமுடிக்கப் பட்டாள்
திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப் படுதல் என்பது
திருமண வாழ்வின் உயர்வு நிலையாலல்ல
திருமண வாழ்வில் வந்து சேர்ந்தவரால்

நம்பிக்கை செயலின் தொடக்கம்
நம்பிக்கை செயலின் ஊக்கம்
நம்பிக்கை தான் வாழ்க்கை
நம்பினோர் கெடுவதில்லை என்பது சான்றோர் சொல்
நம்பிக்கையற்ற செயல் தோல்வியே
நம்பிக்கை நற்காரியத்தின் செயல்பாட்டின் மீது இருக்கட்டும்
நம்பிக்கையற்ற மார்க்கத்தின் செயல்பாடு வீண்
நம்பிக்கையை இறைவன் மீது வைத்து  செயல்படு
நம்பிக்கையை இறைவன் மீது  வைத்தது
நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கையாகும்  

சிலர் கொண்ட நம்பிக்கை அதிசியத்தின் மீது
விண்மீன்கள் நகர்வது இறைவனின் நாட்டம்
விண்மீன்களை வைத்து இவர் பணம் பண்ணுவது அதிர்ஸ்டத்தை சொல்லி
கிரகணங்கள் நிகழ்வதால் மனிதனின் நிகழ்வுகள் மாறுமோ!
வைரத்தை வகையாகப் பிரித்து அதில் அதிர்ஸ்டத்தை புகுத்துவார்
அமைதியும் ஆற்றலும் நம்மிடமிருக்க நட்டாற்றில் விடுபவரை நாடுவது ஏன்?
அறிவின் ஆற்றல், உழைப்பின் உயர்வு உம்மோடு உயர்ந்து நிற்க மாயைகள் மீது பிடிப்பு ஏன்?
#நம்பிக்கை
அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் " என்ற இந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் எனது ஆசிரியத் தந்தை நீடூர் வக்கில் S.E.A. முஹம்மது சயீத் அவர்கள். - தேரிழந்தூர் தாஜுதீன் பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,
 S.E.A. முஹம்மது அலி ஜின்னா நீடூர்.
 Jazakkallahu Hairan நன்றி

No comments:

Post a Comment