Sunday 1 June 2014

மக்கள் விரும்பியது இறைவனால் விரும்பாமல் போனது

லைக் கொடுத்தது மக்கள்.அன்லைக் செய்தவன் இறைவன்.

நான் உன்னைப் பார்த்தேன்
நீ என்னைப் பார்க்கவில்லை

நீ என்னைப் பாராமையால்
நான் உன்னை பாராமல் போகவில்லை

நீ எழுதிய வரிகள் அனைவரையும் கவர்ந்தது
நான் எழுதிய வரிகளும் அனைவர்களாலும் கவரப் பட விரும்பினேன்

உன் வரிகளை உனக்குத் தெரியாமல் எடுத்தேன்
உன் வரிகளில் சில மாற்றம் செய்தேன்

மாற்றம் செய்த என் வரிகள் உன் வரிகளை விட உயர்வாய் வந்தது
மாற்றம் செய்தமையால் உனக்கு கிடைக்கும் லைக்கை விட எனக்கு அதிகமாகக் கிடைத்தது

ஒன்று மட்டும் நான் அறியாமல் செய்தேன்
உனக்கு கிடைத்ததோ மக்கள் கொடுத்த லைக்கொடு இறைவன் கொடுத்த லைக்கும் சேர்ந்தது
எனக்கு கிடைத்ததோ மக்கள் கொடுத்த லைக்கொடு இறைவன் கொடுத்த அன்லைக்கும் சேர்ந்துக் கொண்டது

நீ இறைவனிடத்தில் நன்மையை சேர்த்துக் கொண்டாய்
நான் செய்த செயலால் இறைவன் பார்வையில் பாவங்களை சுமந்து நிற்கின்றேன்

தவறை உணர்ந்து விட்டேன்
நான் உனக்கு செய்த பாதகத்தை முதலில் நீ மன்னிக்க வேண்டும்
உன் மன்னிப்பு இல்லாமல் இறைவன் என்னை மன்னிக்க மாட்டான்
நான் உன்னிடம் மன்னிப்பை நாடி நிற்கின்றேன் மன்னித்து விடு
நான் இனியொரு முறை எக்காலமும் இத் தவறை செய்ய மாட்டேன்
நான் உன் எழுத்தை மாற்றி எழுதினாலும் உன் அனுமதி பெற்று செய்வேன்
அப் புகழ் உன்னை வந்து சேர்ந்தடையும்
அதற்கென Source and Link கொடுத்து விடுவேன்

No comments:

Post a Comment