Thursday 26 June 2014

'விசாதான் ப்ரோப்ளம்'

விசா அந்த நாட்டில் நுழைவதற்கு
பாஸ்போர்ட் இந்த நாட்டிலிருந்து போவதற்கு

மிசாவிலிருந்து தப்பிக்க
விசா கேட்டால்
பைசா நிறையவே கேட்கிறான்

மிசா கிடைச்சாலும் கிடைக்கும் போல் இருக்கு
சில நாடுகளுக்கு போக விசா கிடைக்க சிரமமாய் இருக்கு

துபாய் போக விசா எடுக்கச் சொல்லி பணம் கொடுத்தேன்
துபாய்க்கு பறந்து விட்டார் விசாவை அவருக்கு எடுத்துக் கொண்டு

மருத்துவரிடம் சென்றேன் உடல் நலம் பார்க்க
'உனக்கென்ன ப்ரோப்ளம்' என்றார்
'விசாதான் ப்ரோப்ளம்' என்றேன்
'அதுக்கு எதுக்கு என்னிடம் வந்தாய்' என்றார்
'விசா ப்ரோப்ளம் வந்ததால் உடல் நலம் கெட்டது அதனால் உங்களிடம் காட்டிப் போகலாமென்று வந்தேன்' என்றேன்
'விசா வந்தால் சரியாகப் போய் விடுமென்றார் '
;டாக்டர், விசா வருவதற்குள் நீங்கள் போய் விடுவீர்கள்; என்றேன்
'வெளியே போ' என்று விசா கொடுத்து விட்டார் டாக்டர்

No comments:

Post a Comment