Monday 30 June 2014

இதயத்தால் உயர்ந்தவர் உயர்ந்தவராவார்

இதயத்தால் உயர்ந்தவர் உயர்ந்தவராவார்
பணத்தால் ,பொருளால் உயர்ந்தவர் உயர்ந்தவர் அல்ல
பணமும் பொருளும் பெற்று கருணை மனம் பெற்றவர் உயர்ந்தவர்
பணமும் பொருளும் பெற்று கருணை மனமும் பெற்று மற்றவருக்கும் தந்து உதவுவர் உயர்ந்தவர்
பணமும் பொருளும் பெற்று கருணை மனமும் பெற்று மற்றவருக்கும் தந்து உதவி அதனை பெருமைப் படுத்தி புகழ் நாட விரும்புவர் உயர்ந்தவர் அல்ல
நோன்புக் காலம் உணர்த்தும் வாழ்வின் நெறிகள் நன்மையாக அமையட்டும்

நோன்பு திறக்க தேவையானதை செய்து கொடுப்பவர் நன்மை அடைகின்றார்
நோன்பு திறக்க தேவையானதை செய்து கொடுத்தேன் என்று பெருமையாக சொல்லித் திரிபவர் நன்மை பெறுவதில்லை

ஒருவருக்கு எத்தனை பொருள் கொடுத்தாலும் இன்னும் அதிகமாக கொடுத்திருக்கலாமே என்ற மனம் வரும் பெற்றவருக்கு
ஒருவனுக்கு பசி அடங்க உணவு கொடுத்தால் பசி அடங்கிய நிறைவடைந்து போதுமென்ற மனதோடு மகிழ்ந்து போவார்

சில்லரையாக கொடுத்து சில்லரை பெறும் மனதை உருவாக்குவதை விட
தொடர்ந்து தன் வாழ்வுக்கு பயன் தரும் தொழிலை சொல்லிக் கொடுப்பது அல்லது தொழில் வைக்க உதவுவது உயர்வானது

No comments:

Post a Comment