Wednesday 2 July 2014

எதாவது நல்லது செய்ய வேண்டும்

எதாவது நல்லது செய்ய வேண்டும்

எதாவது நல்லது செய்ய நினைத்து
எதிலாவது கெட்டதில் மாட்டிக் கொள்வேனோ
என்ற நிலைதெரியாத பயம்
எதையும் செய்ய விடாமல் செய்து விடுகின்றது

நடுவீதியில் வாகனத்தில் ஒருவர் அடிபட்டுக் கிடக்க
நல்மனதுடன் வாகனத்தில் அழைத்துச் சென்று
தனியார் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க முயல
அரசு காவல்துறை அனுமதி தேவைப்படுமாம்
அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால்
ஆபத்தான நிலையாக உள்ளதால்
மாநில தலைநகர் மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லுங்கள் என்கின்றனர்
அழைத்துச் செல்ல பணமும் வேண்டும்
அழைத்துச் செல்ல மற்றவர்கள் துணையும் வேண்டும்
அடிபட்டு தன்னிலை அறியாதிருபவர் உறவினர் உதவி வேண்டும்
அனைத்தும் செய்து முடித்தாலும்
மருத்துவர் மற்றும் காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு
சரியான சான்றிதழும் பதிலும் கொடுக்க வேண்டும்
ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால்
அழைத்த நேரத்திற்கு காவல் நிலையத்திற்கும்
அழைத்த நேரத்திற்கு நீதிமன்றதிர்க்கும் அலைய வேண்டும்

என்றுதான் மாறும் இந்நிலை
நடு வீதியில் ஆபத்து நிகழ்ந்தால்
கிடக்கம் பொருளை தன்னைக மாக்கும் மனோநிலை சிலரிடம்
செய்தியை அரசுக்கு சொன்னால்
உடன் கிடைக்கும் உதவி
எக்காலத்தில் வரும் இந்நாட்டில்

No comments:

Post a Comment