Tuesday 23 December 2014

இருக்கும் நாளையே உய்ர்வாக்கிக் கொள்வோம்

ஒவ்வொரு நாளும் உயர்வு
ஒவ்வொரு மாதமும் உயர்வு

நாளை நடக்கப் போவதை நாம் அறியோம்
நாம் இருக்கும் நாளையே உய்ர்வாக்கிக் கொள்வோம்

இருக்கும் நாளெல்லாம் உயர்வு
இருக்கும் காலங்கள் முழுமை பெற சேவை தேவை
கிடைக்கும் நாளையெல்லாம் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்

அனைத்தும் இருந்தும் ஒன்றும் இல்லாத நிலை !


வசதிகள் இல்லை
குறைவுகள் இல்லை

வசதியானவர்களைப் பார்த்து
வசதிகள் வேண்டுமென்று வாடினேன்

வசதிகள் கிடைக்க
வேண்டியதை செய்தேன்

வசதிகள் கிடைத்தது
வேண்டியவைகள் கிடைத்தன

வேண்டியவைகள் கிடைத்தது
வேண்டியது கிடைத்தும் மன நிறைவு இல்லை

நிறைவோடு கிடைக்கும் வாழ்வே
நிம்மதியான (பரக்கத்தை-அருள் வளம்) வாழ்வைத் தரும்

Tuesday 16 December 2014

பழமையை பாதுகாத்து புதுமையை நாடுவது உயர்வு !

உங்களால் அழகிய அரண்மனையை கட்ட முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தர முடியும்
உங்களால் அழகிய அரண்மனையை இடித்துத் தள்ளவும் முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தகர்த்துத் தள்ளவும் முடியும்

உங்களால் இங்கும் அங்கும் கட்டடங்கள் கட்ட முடிந்தாலும்
உங்களால் இங்கும் அங்கும் ஆட்சியை அமைக்க முடிந்தாலும்

உங்களால் கட்டப்பட்ட கட்டிடங்களிலும்
உங்களால் உருவாக்கப் பட்ட ஆட்சிகளிலும்
உங்களால் பழமையின் தனித்தன்மையை
உங்களால் ஒருபோதும் கொண்டு வர முடியாது

உங்களால் கட்டவும், இடிக்கவும் முடியும்!
உங்களால் சிதைக்க நினைக்கும்
உங்களால் சரித்திர புகழ்பெற்ற சிறப்பான கட்டிடங்களை
உங்களால் பழைமையின் தனித்தன்மையை கொண்டு வர முடியாது.

Monday 15 December 2014

வெட்கம் வருவது உடற்கூறு மற்றும் குணத்தைப் பொறுத்தது

சேர்ந்து வா தயக்கம் காட்டாதே
சேர்ந்து வர வெட்கமாக இருக்கிறது
சேர்ந்து வாழ விருப்பம்
சேர்ந்து வர ஏன தயக்கம்
சேர்ந்து போக பார்ப்பவர்கள் பரிகாசம் செய்வார்கள் என பயமாக உள்ளது

இந்த காலத்திலும் இப்படியா இருப்பது
இந்த காலத்திதான் இப்படி இருக்க வேண்டுமாம்
எந்த காலத்தில்தான் சேர்ந்து வருவாய்
புனித பயணம் ஹஜ் செய்யும்போது சேர்ந்து போவோம்
புனித பயணம் ஹஜ் செய்ய காலம் கடத்த விரும்புகின்றாயா
புனித பயணத்தை இப்பொழுதே செய்து விடவேண்டுமென்று விரும்புகின்றேன்

Saturday 13 December 2014

வேண்டியதை வேண்டிக்கொள் முடிவு செய்பவன் முற்றும் அறிந்தவன்!

 மழை
பெய் யென்றாலும் பெய்யாது
நில் யென்றாலும் நிற்காது

அப்பக்கம் பெய்யும்
இப்பக்கம் பெய்யாது

வேண்டியவர் வேண்டியும் பெய்யாது
வேண்டாதவர் வேண்டாமலும் பெய்யும்

பெய்வதற்கு காலமும் உண்டு
பெய்யாததற்கு காரணமும் உண்டு

ஒருவருக்கு வேண்டியது
மற்றொருவருக்கு வேண்டாததானது

பெற்ற மகள் இருவேரிடத்தில் வசிக்க
ஒரு மகள் தந்தையை வேண்டினாள்
பெய்யாமல் இருக்க இறைவனை வேண்டச் சொன்னாள்
பெய்தால் அறுவடை விரயமாகுமென்றாள்

மற்றாரு மகள் வேறிடத்தில் இருந்து தந்தையை வேண்டினாள்
பெய்ய இறைவனை வேண்டச் சொன்னாள்
பெய்யாமல் போனால் செடிகள் வளர்ச்சியற்று வாடிப் போகுமென்றாள்

தந்தை இருவருக்கும் மனமிரங்கி ஒப்புதல் தந்தார்
தந்தை இறைவனிடம் வேண்டினார்
இறைவா !
நீ முற்றும் அறிந்தவன்
நீ கருணையாளன்
நீயே பாதுகாவலன்
இறைவா !
எது நல்லதோ அதைச் செய் என்று இறைவனை வேண்டினார்

பிரபஞ்சங்கள் அருமை அறிய வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கும் .


பல்லாண்டுகளின் முயற்சியின் தொடர் ஆய்வினால் பிரபஞ்சத்தின் அளவினை அறிந்து கொள்ள முடிந்தது

நூற்றாண்டுகளுக்கு மேல் முயற்சி செய்து உடல்களின் அமைப்பையும் அதன் அடிப்படையான வேலைகள் கண்டறிய முடிந்தன

அந்த உடல்களின் அங்கங்களை துல்லியமான வகையில் அவற்றை ஒன்றாக சேர்த்தது மற்றும் பிரபஞ்சங்கள் தனது வட்டத்தில் முறையாக தன் பாதையில் நகருவதை ஆக்குவித்தவன் இறைவனாகின்றான்

இந்த பிரபஞ்சத்தை தவிர்த்து இன்னொன்றும் நமக்காக உள்ளது அதனை நாம் இறந்த பின்னே அறிய முடியும் .அது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கும் .

இதன் அருமையை அறிய உயர்வான வாழ்வை இறைவன் அருள்மறையில் காட்டிய வழியில் இவ்வுலகில் வாழ்ந்தாக வேண்டும்

Tuesday 9 December 2014

நோயும் மனதிற்கு ஓர் நல்மருந்துதான்


உன்னை நீ அறிந்தால் உயர்வடையலாம்
நோயும் மனதிற்கு ஓர் நல்மருந்துதான்

தான் என்னும் அகம்பாவம்
தன்னால்தான் என்னும் தற்பெருமை
தன்னால்தான் எதுவும் முடியும் என்னும் செயல்பாடு
தன்னோடு பாவமான செயல்களையும் சேர்த்துக் கொள்கின்றன

தனக்கு நோய் வர தான் என்ற அகந்தை அகல்கின்றது
தான் செய்த செயல்களின் வெளிப்பாடு
தன்னை உணர வைக்க உதவுகின்ற காரணிக்ளாய் வருபவைகள்
பணிவு ,கண்ணீர் மற்றும் நோய்

திமிர் கொண்ட மனமுடையோர்க்கு
நோய் வருவதும் நன்மையாகவும் அமைகின்றது

அன்றாடம் பாவங்களைச் செய்பவன் பாவங்களை அறியான்
அனறாடம் பாவமன்னிப்பு நாடாதவன்
பட்டன போக பாவமன்னிப்பை பெறாமல்
பாவங்களை சுமந்துச் செல்கின்றான்

நோய் வந்ததால் பணிவும் வந்தடைகின்றது
பணிவு வந்ததால் பாவமன்னிப்பு நாடி கண்ணீர் சிந்துகின்றான்
சிந்திய கண்ணீர் அவனது பாவங்களைக் கரையச் செய்கின்றன
அமைதி மனதில் வந்தடைய நற்செயல்களை நாடுகின்றான்
நற்செயல்களை செய்தமையால் நிம்மதியாக இறக்கின்றான்

"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 5678

Sunday 7 December 2014

எதிர்பாராத நேரத்தில் சில சம்பவங்கள்

நான் லயோலா கல்லூரியில் படிக்கும்போது தினம் நாங்கள் மூன்று பேர்கள் மாலை நேரத்தில் நடந்தே பாண்டி பஜாருக்குச் சென்று காப்பி குடித்து விட்டு மயிலாப்பூரில் நடை போடுவோம்.எங்களைப் பார்த்து எந்த பெண்ணும் பார்ப்பதில்லை
ஒரு நாள் ஒரு வீட்டில் ஜன்னல் வழியாக எங்களைப் பார்த்து ஒரு பெண் சிரித்தாள்
நாங்கள் அதிசயித்து அந்த இடத்தில மற்றவர்கள் கவணிக்காதபடி நின்று பார்த்தோம் .ஒருவர் அவ்வழியே வந்தவர் எங்களைப் பார்த்து 'தம்பிகளா அந்த பெண் சிரிப்பதைப் பார்த்துத் தானே நிற்கிறீர்கள் என்றார்
'இல்லை' என்றோம்
'தம்பி அந்த பெண்ணுக்கு சிறிது மூளை (பைத்தியம்) கெட்டு விட்டதால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் வெளியில் போக விடாமல் அந்த அறையில் பூட்டி வைத்துள்ளார்கள் .நீங்கள் இரண்டு நாட்கள் இப்பக்கம் வருவதனைப் பார்த்து உங்களிடம் சொன்னேன் நீங்கள் தவறாக நினைக்காதீர்கள்' என்றார்
தவறு செய்யாத எங்கள் மனம் கூனிக் குறுகிப் போயிற்று .அந்த பெண்ணுக்காகக மனம் கசிந்தது
நாங்கள் ஏன் இனி அப்பக்கம் போவோம்! நாங்கள் ஏன் இனி பெண்களை ஏறெடுத்துப் பார்ப்போம்!

'வட்டிக்கு கடன் வாங்கி சடலத்தை எரிக்கக்கூடாது'.

மறக்க முடியாத உயர்ந்த கொள்கையோடு சேவை செய்து நேர்மையாக வாழ்ந்தவர்

மயிலாடுதுறையில் உள்ள எங்கள் கடையில் வைத்தியநாதன் நம்பிக்கையான ஒரு கணக்காளர்.
தனது வாழ்நாள் முழுதும் சேவை செய்தார்.
தனது பிள்ளைகள் சம்பாரிக்க ஆரம்பித்தும் தனது குடும்பத்தார் தடுத்தும் வாழ்நாள் இறுதி வரை கடைக்கு வந்து பணிகளை செய்வதில் பிடிவாதமாக இருந்தார் .
அவருக்கு ஆறு பெண்கள் ஒரு பையன் .அனைவரையும் சிறப்பாக மேற்படிப்பு வரை படிக்க வைத்து அவர்கள் வேலை செய்து ஈட்டிய பணத்தின் சேமிப்பைக் கொண்டு அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார்.
ஒரே பையனை ஒரு விஞ்ஞானியாக்கினார்.
அவர் கலாம் பணியில் இருக்கும்போது தானும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ஹரிஹோட்டாவில் மற்றும் திருவனந்தபுரத்திலும் வேலை.இப்பொழுதும் அங்கேயே விஞ்ஞானியாக இருக்கிறார்.

தனது மகனுக்கு  மட்டும் திருமணம் நடக்கு முன் அதிகாலை நேரத்தில் கணக்காளர் வைத்தியநாதன் எங்கள் கடை சம்பந்தமாக ஓர் இடத்திற்கு புறப்படுமுன் அவரது வீட்டில் இதய அடைப்பு வந்ததால் இறந்தார் .

அவர் ஒரு சிறந்த பண்பாளர் தி.க .கொள்கை கொண்டவர்.

அவர் இறப்புக்கு அவர் வீட்டுக்கு நான் சென்றபோது வாசலில் மாட்டப் பட்டிருந்த பலகையில் எழுதப் பட்டிருந்த நான் கண்ட வரிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது

"நான் இறந்து விட்டால் வட்டிக்கு கடன் வாங்கி எனது சடலத்தை எரிக்கக்கூடாது.அதைவிட எனது சடலத்தை நகராட்சியில் ஒப்படைத்து விடுங்கள்" என்பதாகும்.
Mohamed Ali

Thursday 4 December 2014

'அருமை நிச்சயமாக படிக்கிறேன் என்றார்'

இரவு கணினியில் அசைபோட்டு விட்டு
இனிய மென்மையான இசையை கேட்டுக் கொண்டே
இருக்கும்போது என்னை அறியாமல் உறங்கிவிட்டேன்
இரவு ஒரு மணிக்கு உறக்கம் கலைந்தது
ஊரெல்லாம் ஒரே அமைதி
லேசான மழைத் தூரல்
தூக்கம் கலைந்தது
அங்கும் இங்கும் அசைந்து படுத்தாலும்
அயரத் தூங்க முடியவில்லை

திரும்பவும் கணினி திறப்பு
கணினியில் என்னைபோல்
நெருங்கிய நண்பர் உலாவிக் கொண்டிருந்தார்

'இன்னும் தூங்கவில்லையா!' என்றேன்

'ஏனோ தெரியவில்லை இன்னும் தூக்கம் வரவில்லை' என்றார்.

'முத்தம் என்றொரு கட்டுரை எழுதியிருந்தேனே...' பார்த்தீர்களா என்றார்
நான் மட்டும் விடுவேனா !
'கடல் அலை வீசியதோ' என்று நான்  எழுதியதைப் பார்த்தீர்களா என்றேன்
(எனது முகநூல் ஸ்டேடஸ்)
-கடல் அலை வீசியதோ
காதல் வலை வீசியதோ

நேசம் கொண்டு பாடினாயோ !
காதல் கொண்டு பாடினாயோ!

Wednesday 3 December 2014

அவர்கள் செய்த தவறை அவர்கள் அறியவில்லை

 
பாட்டு பாடு நண்பனே!
பாடுவது நல்ல பாட்டாய் பாடு
பாடுவது என்னைப் பற்றி பாடு
பாடுவதை என்னைப் புகழ்ந்து பாடு
பாடுவது புகழ்ச்சியாய் இருக்க
பாட்டினால் மாற்றம் பெற்று உயர்வடைய பாடு
பாடுவதை ஒரு பாடாக நினைத்து பாடாதே
பாடியவர்கள எல்லாம் என்னை ஏசியே பாடிச் சென்றனர்

வாழ்வெல்லாம் வசை மொழிகள்
நல்லவனாக்க நல்ல வார்த்தைகள் சொல்லவில்லை
வசைமொழிகள் மனதை தைத்தது
வசைமொழிகள் நல்லதை நாடவில்லை
வசைமொழிகள் வீம்பாக செயலை நாடியது

குடும்பத்தில் உள்ளவரே குறை கூறி ஊரெல்லாம் பரப்பினர்
தன் மகனே ஆனாலும் தனியே அறிவுரை தரவேண்டுமென்ற
உயர் நோக்கு அறியாமல் போயினர்
அன்பு இருக்குமிடத்தில் அறிவு மங்கிப் போனது

நொந்து போய் நலிவுற்றவனாய் நடுத்தெருவில் நிற்கிறேன்
நண்பனாய் மனதைத் தடவி அமைதியடைய நாலு வார்த்தைப் பாடு
நல்லது கெட்டது அறிய வைத்து அன்பால் மனதை வருடிப் பாடு
உன் பாட்டு கேட்க உயர்ந்து வர ஊரெல்லாம் புகழச் செய்வர்
குடும்பத்தார் கூடி நின்று கும்மி அடித்து மகிந்து வீட்டிற்கு அழைப்பர்

நான் செய்த தவறை நான் அறிந்தேன்
அவர்கள் செய்த தவறை அவர்கள் அறியவில்லை

பிரித்தவன் பிரிக்க முற்படுகின்றான் இடைவெளி வீட்டு

 
வெளிநாட்டில் போய் பிழைப்பை தேடலாம்
வெளிநாட்டிலிருந்து பணம் வரலாம்
வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வரலாம்

இந்நாட்டு மூத்த குடி வெளிநாட்டோடு போய்விட வேண்டுமாம்
ஓரினம் ஓர் மக்கள் இதுவே சங்க கால மக்கள் குணம்
பிரித்தவன் பிரிக்க முற்படுகின்றான் இடைவெளி வீட்டு

இரண்டு விழுக்காடு உள்ளவர்கள்
உரிமை கொண்டாடி மற்றவர்களை வெளியேற்றும் முயற்சி

ஐரோப்பா கண்டத்திலிருந்து வந்ததால்
போங்கப்பா மற்ற கண்டத்திற்கு என்று பேசும் மனப்பான்மை

ஓலை போட்டு மூலைப் பக்கம் கடை போட்டவன்
மூலைப் பக்கம் இடம் கொடுத்தவனை மூலைப் பக்கம் அனுப்ப முயற்சி

சமூக வலைதளங்களில் வளம் வருவது !

 
 
இருக்கும் அறிவு போகாமல் இருக்கிறது
இருக்கும் அறிவை வளர்த்து வைக்கிறது

வேண்டியது கிடைக்கிறது
வேண்டாததும் தோன்றுகின்றது

நேசம் வளர்கிறது
பாசமாகி தொடர்கிறது

பிடிப்பை தருகிறது
பிடித்த பிடி வலுவாகிறது

காதல் பிறக்கிறது
காதலில் மாற்றம் வருகிறது

புதியவை வருகிறது
பழையவையும் தொடர்கிறது

விளம்பரம் வருகிறது
விமர்சனம் தொடர்கிறது

வயது வித்தியாசமில்லை
தருவதில் வித்தியாசமுண்டு

ஏச ஓர் இடமாக இருக்கிறது
ஏசுவதற்கும் செலவில்லாமல் இருக்கிறது

ஆட்சியாளரும் பார்க்கின்றனர்
ஆட்சியாளருக்கும் மன தைரியத்துடன் எச்சரிக்கை கொடுக்க முடிகின்றது

கவிதையாகவும்
கதையாகவும்
கட்டுரையாகவும்
நிகழ்வாகவும்
மனதின் ஓட்டங்கள் நிறைவைத் தருகின்றது

குறையென்ன மனமே
மனதில் தோன்றியதை பகிர்ந்து
மனதின் பாரத்தை இறக்கி விடு

வார்த்தைகள் விளையாடட்டும்
வாழ்வு பெருகட்டும்
வாழ்த்துகள்