Thursday 4 December 2014

'அருமை நிச்சயமாக படிக்கிறேன் என்றார்'

இரவு கணினியில் அசைபோட்டு விட்டு
இனிய மென்மையான இசையை கேட்டுக் கொண்டே
இருக்கும்போது என்னை அறியாமல் உறங்கிவிட்டேன்
இரவு ஒரு மணிக்கு உறக்கம் கலைந்தது
ஊரெல்லாம் ஒரே அமைதி
லேசான மழைத் தூரல்
தூக்கம் கலைந்தது
அங்கும் இங்கும் அசைந்து படுத்தாலும்
அயரத் தூங்க முடியவில்லை

திரும்பவும் கணினி திறப்பு
கணினியில் என்னைபோல்
நெருங்கிய நண்பர் உலாவிக் கொண்டிருந்தார்

'இன்னும் தூங்கவில்லையா!' என்றேன்

'ஏனோ தெரியவில்லை இன்னும் தூக்கம் வரவில்லை' என்றார்.

'முத்தம் என்றொரு கட்டுரை எழுதியிருந்தேனே...' பார்த்தீர்களா என்றார்
நான் மட்டும் விடுவேனா !
'கடல் அலை வீசியதோ' என்று நான்  எழுதியதைப் பார்த்தீர்களா என்றேன்
(எனது முகநூல் ஸ்டேடஸ்)
-கடல் அலை வீசியதோ
காதல் வலை வீசியதோ

நேசம் கொண்டு பாடினாயோ !
காதல் கொண்டு பாடினாயோ!
************
ஊரைச் சொன்னாலும்
பெயரைச் சொல்லாதே

உனக்கு அறிந்தது
உன்னை அறிந்தவளும் அறிந்திருக்கட்டும்

எழுதும்போது உன் பெயரை நான் மறக்க
என்னோடிருந்து உன் பெயரை நான் அறிய வைத்த
என்னோடிருப்பவளின் உயர் குணத்தை அறிந்து
என்னின் இதயம் உவகையால் உயர்வாகின்றது
------------
நீ மருத்துவம் படித்து வீட்டு வேலை செய்கின்றாய்
நான் வக்கீல் படித்து வீட்டு வேலை செய்கின்றேன்)

அவர் ''படிக்கவில்லை' என்றார்.
அவர் நெருக்கமானவர் என்பதால் விளக்கமாக நடந்த நிகழ்வுகளை சொன்னேன்

'அது எழுதியதால் அது கனவாக வந்து
அந்த  கனவின் நினைவில்தான் தூக்கம் அற்று தவிக்கின்றேன்' என்றேன்

இனி வாழ்வில் நடந்த மறக்க முடியாத நினைவுகளை எழுதக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்

'நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்' என்று முடித்தார்
அந்த வார்த்தை மனதுக்கு அமைதி தந்தது
தூக்கமும் தழுவியது
நிம்மதியாக தூங்கி காலையில் அவருக்கு மனதிற்குள் நன்றியை சொல்லிக் கொண்டேன்
*********************************
(எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்
காதல் வலை வீசியதோ/ படியுங்கள்.உண்மை நிகழ்வு .எனது மனைவி அந்த பெண் பெயரை நினைவு படுத்தியது .அந்தப் பெண்  என்னை காதலித்தாள் ,ஆனால் அது  ஒரு தலைக் காதல்.
 நான் அதனை நேசித்தேன் ஆனால் காதலிக்க வில்லை.
அது பாசமாக இருக்கும் .நான் டான்சில் அறுவை செய்துக் கொண்டபோது என்னை பார்க்க வந்த அந்த பெண் வந்தாள் அப்பொழுது அந்த பெண் அன்புள்ளம் கொண்டு ஒரு பாடலை பாடினாள்
அந்த பாடல்
கண்ணதாசன் எழுதிய சினமா பாடலை
'அன்புள்ள அத்தான்' பாடலை ..'

'அந்த 'ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் அவள்  ஞாபகம் தாலாட்டும்....

 .அந்த பெண் பெயரை நான் மறக்க மனைவி நினைவூட்ட நாங்கள் சிரித்து மகிழ்ந்தோம்
இன்று அந்தப் பெண்  மருத்துவ(டாக்டர்)படித்து சிறிது காலம் மருத்துவ சேவை செய்தது.  .
தற்பொழுது டாக்டரை மணந்து மகிழ்வாக உள்ளது
-------------------
'அருமை
நிச்சயமாக படிக்கிறேன் என்றார்'

நான் அப்பொழுது லயோலாவில் படித்தேன் .அந்த பெண்  மருத்துவம் படித்தது .மெரீனா கடற்கரைக்கு நான் போன பொழுது  அந்த பெண் என்னைக் காண வர தற்செயலாக எனது மூத்த அண்ணன் அங்கு வர நான் அவரை பார்த்து அவரை சந்தித்துப் பேச அவர் என்னை விடுதிக்கு கொண்டு விட்டார் .அந்த பெண் பிறகு தன்னை பாராமல் போனதை .மதிக்காமல் போனதாக வருந்தியதும் நினைவுக்கு வருகின்றது .காதல் நினைவுகள் காலம் உள்ளவரை நிற்குமோ !

சில நிகழ்வுகள் அழியாமலிருக்கும் என்பதை இப்போது அறிந்து கொண்டேன்
'இது எனது  மனைவிக்கும் தெரியும்.' என்றேன்
'நீங்கள் ஒரு அற்புதமான மனிதர்' என்றார்
இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) பிறகு உங்களுக்கு நேரம் கிடைக்க பிறகு பேசுவோம் என்று உரையாடலை முடித்துக் கொண்டோம்
**********************************


படம்; கைராசி
இயற்றியவர்: கண்ணதாசன்

அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்
தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்

(அன்புள்ள ....
மாலைபொழுது வந்து படைபோல் கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியை சொல்லும்
ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்

(அன்புள்ள ...

பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே
பருகும் இதழிரண்டும் இருந்தென்ன பயனே
கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை
கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை

(அன்புள்ள ....
பொன் மணிமேகலை பூமியில் விழும்
புலம்பும் சிலம்பிரண்டும் என்னை விட்டு ஓடும்
கைவளை சேர்ந்து விழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்
அன்புள்ள அத்தான் வணக்கம்
திருமணம் ஆகுமுன் வேண்டாம் குழப்பம்

No comments:

Post a Comment