Saturday 13 December 2014

வேண்டியதை வேண்டிக்கொள் முடிவு செய்பவன் முற்றும் அறிந்தவன்!

 மழை
பெய் யென்றாலும் பெய்யாது
நில் யென்றாலும் நிற்காது

அப்பக்கம் பெய்யும்
இப்பக்கம் பெய்யாது

வேண்டியவர் வேண்டியும் பெய்யாது
வேண்டாதவர் வேண்டாமலும் பெய்யும்

பெய்வதற்கு காலமும் உண்டு
பெய்யாததற்கு காரணமும் உண்டு

ஒருவருக்கு வேண்டியது
மற்றொருவருக்கு வேண்டாததானது

பெற்ற மகள் இருவேரிடத்தில் வசிக்க
ஒரு மகள் தந்தையை வேண்டினாள்
பெய்யாமல் இருக்க இறைவனை வேண்டச் சொன்னாள்
பெய்தால் அறுவடை விரயமாகுமென்றாள்

மற்றாரு மகள் வேறிடத்தில் இருந்து தந்தையை வேண்டினாள்
பெய்ய இறைவனை வேண்டச் சொன்னாள்
பெய்யாமல் போனால் செடிகள் வளர்ச்சியற்று வாடிப் போகுமென்றாள்

தந்தை இருவருக்கும் மனமிரங்கி ஒப்புதல் தந்தார்
தந்தை இறைவனிடம் வேண்டினார்
இறைவா !
நீ முற்றும் அறிந்தவன்
நீ கருணையாளன்
நீயே பாதுகாவலன்
இறைவா !
எது நல்லதோ அதைச் செய் என்று இறைவனை வேண்டினார்

No comments:

Post a Comment