Saturday 26 December 2015

தீனைப் பெற்றோர் வெற்றிப் பெற்றோர்




தீனைப் பெறுதல் நெறியைப் பெறுதல்
தீனைப் பெறுதல் ஞானம் பெறுதல்
ஞானத்தின் திறவுகோல் நாயகம்

தீனைப் பெற்றோர் வெற்றிப் பெற்றோர்
தீனை விட்டோர் தானும் கெட்டார்
தீனில் தேடல் வாழ்வின் வழி தேடல்
தீனில் இல்லாததை புகுத்தி
தீனில் சொல்லாததை மனதில் நிறுத்தி
தீனையும் கெடுத்தார் தானும் கெட்டார்

Wednesday 11 November 2015

சோம்பலை விட்டும் பாதுகாவல் தேடுவோம்!

தேவை என்றால் மறைந்து விடுகிறது சோம்பல். (laziness, lethargy or sluggishness)
உற்சாகம் குறைவதால் வருவது சோர்வு
சோர்வின் முடிவு சோம்பல்
சரியான தூக்கமின்மை சோர்வைத் தரும்
ஆர்வம் வர சோம்பலுக்கு தீர்வு கிடைக்கும்
வாழ்வின் முன்னேற்றத்திர்க்கு  தடை செய்யும் சோம்பல்!
முயற்சி  சோம்பலை சிதறடிக்கும்

சென்னை செல்வதற்கும் சோம்பி நின்ற மனநிலை சென்னை செல்லும் பயணத்தை தடுத்தது . தொலைபேசியில் அழைப்பு வந்தது
'நீங்கள் சென்னை வந்தால் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணமும் ,பொருளும் தருகிறேன் 'என்று.
மனதில் ஒரு வேகம் வந்தது சோம்பல் முறிந்தது .உடன் சென்னை புறப்பட்டேன் .

மகிழ்வான வாழ்க்கையில் காலத்தை நீடித்தல்

பார்க்கும் இடம் புதிதாக இருத்தல்
புதியவர்களிடம் கணிவாகபேசுதல் 

விளையாட்டில் ஆர்வம்
நம்பிக்கையில் உறுதி

இசையை ரசித்தல்
சிறந்த புத்தகத்தை படித்தல்

ஆரோக்கியமான உணவு
நல்லதை மற்றவருக்கு ஏற்றி வைத்தல்


அதிகாலை மகிழ்வான நடை
அந்தி மயங்கும் நேரத்தின் காட்சியை கண்டு ரசித்தல்
விரும்பிய படக்காட்சியை கண்டு மகிழ்தல்

செயல்களில் தைரியம்
செயல்களில் தீவிரம்

செய்த வேலையின் களைப்பை ஓய்வு பெறுதலால் கிடைக்கும் மகிழ்வு 
செய்த வேலையின் சிறப்பான முடிவை நினைத்து மகிழ்தல்

Saturday 31 October 2015

நான்

நான் சிரிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் அழும்போது உன்னை நினைக்கின்றேன்

நான் மற்றவரை நேசிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் தனித்து விடப்பட்டபோது உன் நினைவில் மூழ்கின்றேன்

நான் உண்ணும்போது உன்னை மறந்தேன்
நான் உண்ணும் உணவு உன்னால் கொடுக்கப்பட்டதாய் இருக்க
நான் உன்னை நினைக்கின்றேன் பசியால் வாடும்போது

நான் ஆரோக்கிய நிலையில் இருக்க உன்னை மறந்தேன்
நான் ஆரோக்கிய நிலை குன்றய உன்னருள நாடி உன்னை யாசித்து அழுகின்றேன்

உணர்வுகள் உணர்சிகள்

உணர்வுகள் உணர்சிகள் பல்வகை
உணர்வுகள் உணர்சிகள் மூளையின் வெளிப்பாடு

உணர்வுகள் உணர்சிகள் மனதில் பேசும்
உணர்வுகள் உணர்சிகள் தூண்ட துடிக்கின்றனர்

உணர்வுகள் உணர்சிகள் இயல்பாய் இருக்க மகிழ்வு
உணர்வுகள் உணர்சிகள் இன்பமும் துன்பமும் தரும்

உணர்வுகள் உணர்சிகள் கட்டுபடுத்தப்பட வியாதிகள் வரும்
உணர்வுகள் உணர்சிகள் அஃறினைக்கும் உண்டு

உணர்வுகள் உணர்சிகள் அஃறினையால் (செடி, கொடி,மிருகங்கள்) கட்டுபடுத்தப் படுவதில்லை
உணர்வுகள் உணர்சிகள் உயர்தினையால் கட்டுபடுத்தப் படுகின்றன

அன்னை பாத்திமா அவர்கள் சிந்திய கண்ணீர்

அன்னை பாத்திமா அவர்கள் சிந்திய கண்ணீர்
நபிகள் நாயகத்தின் பேரர்கள் ஹசன் ,ஹுசன் இருவர்களும் தங்களது சிறு வயதில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதனை கண்ணுற்ற தாய் பாத்திமா மனம் கலங்கி அழுதார்கள்
தங்கள் தாய் அழுவதை கண்ட பிள்ளைகள் தங்கள் சண்டையை நிறுத்தி
தாயிடம் பாசமாக 'ஏனம்மா !அழுகிறீர்கள் ' என்று வருத்தமாக கேட்டார்கள்
'குழந்தைகளை உனக்கு சரியாக வளர்க்கத் தெரியவில்லையே'
என்று அல்லாஹ் கேட்டால் நான் என்ன சொல்வேன்'
என நினைத்து மனம் வருந்துகின்றது என்றார்கள்
அன்னை பாத்திமா அவர்கள் சொன்ன பதில் ஹசன் ,ஹுசன் அவர்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்தது
இனி தங்களுக்குள் சண்டை போடமாட்டோம் என்று அன்னைக்கு ஆறுதல் மொழி சொன்னார்கள்

இஸ்லாத்தில் குழந்தையை சிறப்பாக வளர்ப்பது தாய்க்கு முக்கியமாக கருதப் படுகின்றது

நம்பிக்கை உயர்வுக்கு வழிகாட்டும்!

நம்பிக்கை உயர்வுக்கு வழிகாட்டும்!
இறைவன் , மதம் மற்றும் மார்க்கம் இவைகள் அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையின் ஆணிவேர் . நம்பிக்கை இல்லையெனில் அதனை தொடர்வது போலியாகிவிடும். ஆனால் இறைவன் தேவை என்ற ஒரு நம்பிக்கை மட்டும் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன் அவசியம் என்று நம்பினால், இறைவன் உள்ளதையும் நம்ப வேண்டும்.
இறைவன் மீது கொண்டுள்ள நம்பிகையும் அவன் மீது வைத்துள்ள பற்றும் உங்களை ஆத்ம திருப்தியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மனித சட்டத்தின்மீது மனிதனுக்கு மரியாதையும் பயமும் இல்லை. மனித சட்டத்தினை மனிதன் தான் விரும்பிய போக்கில் தனக்கு தகுந்ததுபோல் மாற்றம் செய்துக் கொண்டு வாழ முற்படும்போது பல குழப்பங்களும் அதிருப்தியும் சச்சரவும் ஏற்படத்தான் செய்கின்றது . மனிதன் கொண்டு வரும் சட்டங்கள் இறை நம்பிக்கையுடன் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த ஒரு மார்க்கமும் தவறு செய்யத் தூண்டுவதில்லை.
இறைவன் மீது முழு பக்தி கொண்டு, அன்பு, அற வழி வாழ்பவருக்கு எல்லா நாளும்,நன்மை தரும்.
“…சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (03:159)

தலைமை

தலைமை
தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது.
பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை 'வேண்டாம்.' என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும் அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.

பெண்ணில்லா உலகில் வாழ்வேது

பெண்ணின் படைப்பு உயர்வானது
பெண்ணின்றேல் நாமில்லை
பெண்ணாக வந்தால் அம்மா
பெண்ணால் வந்த உறவுகள் நீடிக்கும்
பெண்ணால் வாரிசுகள் வளரும்
பெண்ணின் பணிவிடை பாசமானது
பெண்ணின் பணிவு இயல்பானது
பெண்ணிடம் கணிவு மேன்மையானது

இறைவன் கொடுத்த சட்டங்கள் நிலையானது, குறை இல்லாதது மற்றும் இதனை மாற்ற முடியாதது. நன்மைகள் தரக் கூடியது .

மனிதனாய் பிறந்தாலும் பல கடமைகளும் இருந்து சில உரிமைகளும் பெற்றிருந்தாலும் நிம்மதியாய் வாழ பல போராடங்களையும் அளவற்ற தொல்லைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றோம். பார்த்தால் மன்னன் பசித்தால் பரதேசி.
'உனக்கென்ன நீ கொடுத்து வைத்தவன்' என்று நாம் சொல்ல எல்லாம் இறைவன் அருள் என்று சொல்பவனும் 'உம....வீட்டுக்கு வீடு வாசப்படி' என்று புலம்புவனும் உண்டு . எங்கு நிம்மதியாக வாழ விடுகிறார்கள். இந்த உலகில் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் என்பர் சிலர். 'சரிப்பா வேறு உலகம் ஒன்று உள்ளதே அதற்கு ஏதாவது உருப்படியா ஒரு வழி வகுத்து வாழ்கின்றாயா?' அதற்கும் சரியான பதில் கொடுக்க முடியவில்லை.

காலத்தின் மாற்றம்,

நாம் வாழும் காலம் மறுமலர்ச்சி காலம், இங்கு என்ன புரட்சியா நடந்துவிட்டது? எகிப்தில் கமால் பாட்சா புரட்சி வழி கொண்டு பெண்களுக்கு உரிமை கொடுத்து மாற்றம் கொடுத்தார் . இஸ்லாம் அனைத்து உரிமையும் பெண்களுக்கு தந்திருந்தபோதும் அதனை முறையே பயன்படுத்தாமல் ஒரு சிலரின் தவறான பிரசங்கத்தினால் பெண்களை கல்வி கற்க விடாமல் செய்து வீட்டிற்குள் முடக்கி விட்டோம். தற்பொழுது அந்த நிலையில் மாற்றம் வர பெண்களும் உயர் கல்வி பெற்று வருகின்றனர்.

பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.

பணம் பணம் பண்ணுகின்றது. முதலில் பணத்தை சேர்த்துக் கொள் பின் அனைத்தும் உன்னுடன் ஒட்டிக் கொள்ளும். பணம் பத்தும் செய்யும். பழம் உள்ள மரத்தினை நாடி பறவைகளும் பறந்து வருவது போல் பாசமும், அன்பும் மற்ற அனைத்தும் பணம் வரும்போது உன்னுடன் ஓடி வரும்.
பணம் வந்தது நேர்மையான உழைப்பினால் மட்டும் வந்தது என்பது உண்மையாக இருக்க முடியாது. பணம் வர தவறான பல வகைகளும் கையாளப்படுகின்றன. பணத்தினால் நல்ல செயல்களும் மற்றும் பாவமான செயல்களும் செய்யப்படுகின்றன. பணம் வந்த வழியினை கேட்டால் உண்மையை யாரும் சொல்லமாட்டார்கள். அது தனது திறமையால் வந்தது என பெருமை பேசுவார்கள். பணம் பேசுவதால் அதனை 'ஆமாம்' போட்டு ஒத்துக் கொள்வார்கள்.

Sunday 4 October 2015

நீடூர் - நெய்வாசல்

                           நீடூர் - நெய்வாசல்

நீடூர்

முகவரி: நீடூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203

எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.

இந்நீடூர் இராஜாதி ராஜவள  நாட்டைச் சேர்ந்ததாகும்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது

                                நீடூர் தொடர்வண்டி நிலையம்


.

Sunday 30 August 2015

அதுவும், முடிந்து விடும்

அம்மா,
நான் உன்னை இழந்து வாழ்கின்றேன்
நான் உன்னை இழந்ததால்
நான் மிகவும் கஷ்டப்பட்டேன்

நான் இன்று உனக்குப் பிடித்த நாற்காலியில் தனியாக அமர்ந்து
என் வாழ்க்கையைப்பற்றி நினைத்து அதிசயிக்கின்றேன்
அது என்னை உங்கள் ஞாபகத்தில் அழைத்துச்செல்கின்றது

உங்கள் மகளாகிய நான் வளர்ந்து விட்டேன்
உங்கள் மகள் உலகத்தை சந்தித்து விட்டாள்
உங்கள் மகள் சோதனைகளைக் கடந்து சவால்களை சமாளித்து விட்டாள்
இவைகள் அனைத்தும் என்னால் செயல்படுத்த முடிந்தது
இறைவனிடம் எனக்காக நீ செய்த பிரார்த்தனையால்தான்

பெற்றோர்

உங்கள் கண்கள் உங்கள் எண்ணங்களைப் பேசுகின்றன ,
உங்கள் குரல் உங்கள் வலி மற்றும் துன்பம் அனைத்தையும் மறைத்து விட்டு ஒலித்து இசைக்கின்றது

உங்கள் மென்மையான கருணையான இதயம்
எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்து,
எங்கள் பாசத்தை உயர்வடையச் செய்கின்றது
ஒவ்வொரு கணமும் ஒரு புதிய ஆரம்பமாய் அலை வீசுகின்றது

உங்கள் வார்த்தைகள் மற்றும் நிலையான பாதுகாப்பு கொண்ட
உங்கள் மென்மையான மற்றும் உங்கள் பாசமான அணுகுமுறை
அது எப்போதும் எங்கள் மனதில் ஊஞ்சலாய்
அமைதியாக தென்றலாய் நெருடுகின்றது

நீங்கள் எங்களுக்கு அல்லாஹ்வின் அருளால் உயரிய உயிரைக் கொடுத்து நேசித்தீர்கள்
நீங்கள் இப்போதும் மற்றும் எப்போதும் அல்லாஹ்வின் அருளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

Monday 24 August 2015

ஹிஜாப் அணிந்து செல்வது எந்த தவறுமில்லை. ஹிஜாப் நன்மையான பயனையே தரும்



நான் ஒடுக்கப்பட்ட பெண்ணாக நீங்கள் என்னை நினைப்பதனை நான் அறிகின்றேன் அதற்கு முக்கியமாக காரமாக நீங்கள் சொல்வது நான் உடுத்தும் ஆடை . ஹிஜாப் அணிந்து செல்வது எந்த தவறுமில்லை மற்றும் இது நன்மையான பயனையே தரும்
ஆடை பாதி ஆள் பாதி என்பார்கள் , அதன் உண்மையான பொருள் சுத்தமான ஆடையணிந்து அசிங்கான ஆடை அணியாமல் இனக்கவர்ச்சியை தூண்டாமல் இருப்பதேயாகும் . பெண்களுக்கே உள்ள தனித்த குணம் வெட்கம். .வெட்கம் கெட்டால் வேதனை வந்து சேரும் . என்னுள்ளே இருக்கும் சிறப்பு நாணமும்,அடக்கமும்,தான். மனதளவில் உள்ள உயர்ந்த எண்ணங்கள் தான் பெண்மைக்கு பெருமை தருகின்றது . நான் ஒரு முஸ்லிம் நான் விருபிய ஆடையை விரும்பி அணிந்தாலும் அதற்கு ஒரு வரைமுறை உண்டு .அதனை மிகவம் பெருமையாகவே கருதுகின்றேன் .என் உடல் அழகை என் கணவர் கண்டு களிப்பதில் எந்த தவறுமில்லை. நான் கவர்ச்சி தரும் ஆடைகளை அணிந்து மற்றவர்களின் மனதினை கெடுத்து அதனால் விளையக்கூடிய தவறான செயல்களுக்கும் பாவமான் காரியங்களுக்கும் நான் ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. இவ்விதம் நான் உடுத்தும் உடையால் என் உரிமை சிறிதும் பாதிக்கப்படவில்ல. மற்ற பெண்களைப் போலவே கல்வி கற்க பாடசாலைக்கு, கல்லூரிக்கு செல்வதற்கும் மற்றும் அலுவலகங்கள் செல்வதற்கும் இஸ்லாத்தில் எந்த தடையுமில்லை
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது.

Saturday 22 August 2015

நாம் ஏன் மகிழ்வாக இல்லை?

என் முடி இப்போது வெள்ளையாகி விட்டது , இளமையில் இருந்த மகிழ்ச்சி இப்பொழுது எங்கே காணாமல் போய்விட்டது.வயது வளர முடியின் நிறம் மாறுவது இயற்கை. மனதில் மாறுபடும் மகிழ்வும் குறைந்து வருவது இயற்கையாகிவிடுமோ! வயதானால் உள்ளம் பண்பட்டு துயரம் தொலைவதற்கு என்னதான் வழி!

அதற்கும் ஒரு வழியை இறைவன் காட்டாமலா இருப்பான்!

ஆசை,அளவிற்கு மீறிய விருப்பம், நினைத்தது கிடைக்காமல் போகும்போது ஏற்படும் விரக்தி ,கிடைத்ததை இழக்கும் போது அனுபவிக்கும் துயரம் அத்தனையும் வாழ்வோடு ஒன்றியதுதான். அனைத்தையும் சமநிலையாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் எப்போழுதுதான் வரும்?

Thursday 20 August 2015

நித்தம் நித்தம் நினைவில் வந்து நினைவூட்ட!

பத்தினி வேண்ட மாதம் மும்மாரி பெய்யும்
மணமாகி வரவேண்டியது வராமல் 'மாதம்' மும்மாதமாக
கணவன் காதில் போட்டு வைக்க
'கள்ளி இத்தனைநாள் மறைத்து வைத்தாயே !'
இனிய முத்தங்கள் அடை மழையாய் பெய்ய
நான் என்னை மறந்தேன்
நேரம் பார்த்து நேசம் காட்டி நெருங்கினார்
வாரிசு வேண்டி பொறுமைத் தேவை
அறிவுரை ஆற்றும் ஆற்றல் பெற்றேன்
அதிசயம் ஆனால் உண்மை அடங்காதவர் அடங்கினார்

Saturday 15 August 2015

பிரபஞ்சத்தின் விரிவு / பிரபஞ்சத்தின் அற்புத அளவு


பிரபஞ்சத்தின் விரிவு

பிரபஞ்சத்தின் அற்புத அளவு

பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எண்ணிக்கை அநேகமாக உலகின் அனைத்து கடற்கரை மணல் துகள்கள் எண்ணிக்கை போன்று உள்ளது .

பிரபஞ்சத்தின் மொத்த பொருள்கள்  கணக்கிலடங்காதவை.

விண்மீன் குழுவில் கோடிக் கணக்கில் நட்சத்திரங்கள்

Wednesday 15 July 2015

வெட்கப்படுவது ஒரு வெட்கக் கேடா!

வெட்கப்படுவதற்கு வெட்கப் பட்டுத்தானே ஆகவேண்டும். வெட்கப்படும் குணம் மனிதப் பிறவிக்கு கொடுக்கப் பட்ட மகத்தான அருள். வெக்கப் படுவது பெண்களுக்கு மட்டும் தேவையானது என நினைக்க வேண்டாம் . அது ஆணுக்கும் மிகவும் அவசியமானது. அந்த மாண்பு இயற்கையாக

நல்லோர்களுக்கு தானே வந்தடையும்.வெட்கப்படுவதனை விரும்பாமல் இருப்பவர்களும் உள்ளனர்.அந்த குணம் அவர்களுக்கு இருந்தாலும் அதனை தன்னிடம் வராமல் இருக்க அவர்கள் வாழும் முறையில் ஏற்பட்ட மாற்றத்தினால் வந்ததாகும்.

வெட்கப்படும் போது அந்த நபரின் முகத்தில் மாறுதல் ஏற்பட்டு அவர் முகம் சிவப்பாக மாறுவதனை நாம் காண முடியும்.வெட்கப்படுவதின் செயல்முறை போது, அந்த நபரின் பரிவு நரம்பு விரிவடைவத்தின் காரணமாக இரத்தம் தோல் மற்றும் முகத்தில் ஒரு சிவப்பாக்குதல் விளைவாக, இரத்த நாளங்களின் வேலை அதிகரிக்கும்.

Saturday 11 July 2015

நோன்பு நோற்றதால் நிறைவு கொள்கின்றேன்

நோன்பை கடமையாக்கினாய்
நோன்பை நாங்கள் நேசிக்கின்றோம்
நோன்பு நோற்றதால் நன்மைகள் கூடும் என்கிறாய்
நோன்பு வைத்தால் பாவங்கள் குறையும் என்கிறாய்
மற்ற பலன்களை எதிர்பார்க்க வில்லை
நோன்பு நோற்றதால் நிறைவு கொள்கின்றேன்
மற்றதை உன்னிடம் விட்டு விட்டேன்
முற்றிலும் அறிந்தவன் நீ
நோன்பால் நாங்கள் அடையும் நிம்மதியே உயர்வானது
நோன்புக் காலத்தில் அடையும் உயர்வும் ,மதிப்பும் ,நிம்மதியும்
நீ கொடுத்த அருள்
உனக்கே அனைத்து புகழ் அனைத்தும்

அன்னை பாத்திமா அவர்கள் சிந்திய கண்ணீர்

நபிகள் நாயகத்தின் பேரர்கள் ஹசன் ,ஹுசன் இருவர்களும் தங்களது சிறு வயதில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதனை கண்ணுற்ற தாய் பாத்திமா மனம் கலங்கி அழுதார்கள்
தங்கள் தாய் அழுவதை கண்ட பிள்ளைகள் தங்கள் சண்டையை நிறுத்தி
தாயிடம் பாசமாக 'ஏனம்மா !அழுகிறீர்கள் ' என்று வருத்தமாக கேட்டார்கள்
'குழந்தைகளை உனக்கு சரியாக வளர்க்கத் தெரியவில்லையே'
என்று அல்லாஹ் கேட்டால் நான் என்ன சொல்வேன்'
என நினைத்து மனம் வருந்துகின்றது என்றார்கள்
அன்னை பாத்திமா அவர்கள் சொன்ன பதில் ஹசன் ,ஹுசன் அவர்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்தது
இனி தங்களுக்குள் சண்டை போடமாட்டோம் என்று அன்னைக்கு ஆறுதல் மொழி சொன்னார்கள்

இஸ்லாத்தில் குழந்தையை சிறப்பாக வளர்ப்பது தாய்க்கு முக்கியமாக கருதப் படுகின்றது

உங்கள் வாழ்க்கை முழுமை அடைய ...

திருமணம் மூலம் நீங்கள் ஒரு மனைவி / கணவர் மட்டும் அல்ல ,
நீங்கள் உங்கள் உலகம் முழுவதும் பெறுகின்றனர்.

தற்போது முதல் உங்கள் நாட்கள் முழுவதும் வரை, உங்கள் மனைவி / கணவர் உங்கள் பங்குதாரர்,
உங்கள் துணை, உங்கள் சிறந்த நண்பர்
அவள் / அவன் உங்கள் தருணங்களை உங்கள் நாட்களில், உங்கள் ஆண்டுகளுக்கு பகிர்ந்து. அவள் / அவன் உங்கள் இன்பத்திலும் துன்பத்திலும், உங்கள் வெற்றி தோல்விகளை, உங்கள் கனவுகள் மற்றும் உன் பயத்தைப் பகிர்ந்து. நீங்கள் மோசமாக இருக்கும் போது, அவள் / அவன் நீங்கள் சிறந்த பாதுகாப்பு இடம்பெறவுள்ளனர்; உங்களுக்குள் ஒரு இரகசிய உண்டு,
அவள் / அவன் அதை வைத்து; நீங்கள் ஆலோசனை தேவைப்படும் போது, அவள் / அவன் நீங்கள் சிறந்த ஆலோசனை வழங்குவார்.
அவள் / அவன் எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும். நீங்கள் காலையில் எழுந்து போது உங்கள் கண்கள் காணும் முதல் விஷயம் / அவளோடு இருக்கும். ஒரு கணம் அவள் / அவன் உன்னோடு அல்ல உடல், அவள் / அவன் அவள் / அவன் இருதயம், மனம் மற்றும் ஆன்மா
நீங்கள் மற்றவருக்காக , பிரார்த்தனை செய்கின்றீர்கள் நல்லதை நினைக்கிறீர்கள்

Wednesday 3 June 2015

காலை உணவின் முக்கியத்துவம் அறியாமல் இருப்பது ஏன்?

காலை உணவின் முக்கியத்துவம் அறியாமல் இருப்பது ஏன்?

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி ...

இறைவன் தந்த அந்த அருட்கொடையான உணவை நாம் அவசர கோலத்தில் சாப்பிடுகின்றோம் . பல இறக்குமதிகளில் 'பாஸ்ட் புட்' ஒன்றாக சேர்ந்துக் கொண்டது.
நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழ்வார் என்பது ஆன்றோர் மொழி . மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது. நாமும் உணவு சாப்பிடும் போது இது இறைவனால் கொடுக்கப்பட்டது என அவனுக்கு நன்றி செலுத்தி மெதுவாக ரசித்து உண்ணும்பொழுது உடல் ஆரோக்கியம் கிட்டும் . இயற்கையின் இனிமை கண்டு ரசிப்பதும் அதனை ஆராய்ச்சி செய்வதும் நம்மை இறைவனது ஆற்றல் அறிய வழி வகுக்கின்றது. நாம் உண்ணும் உணவினை அனுபவித்து ரசித்து உண்பதில் நமது உடலுக்கு ஆரோகியதினை தருவது மட்டுமில்லாமல் நிச்சயமாக இறைவனது 'அல்லாஹ்வின்' (சிலர் இயற்கை என்று சொல்வார்கள்) ஆற்றல் அதில் அடங்கி இருப்பதனை அறிய வருகின்றோம். உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா! சோறு அரிசியிலிருந்து வந்தது .அரிசி நெல்லிருந்து வந்தது ... தொடருங்கள் ..உங்கள் சிந்தனையை . இறுதியில் உங்கள் முடிவு இறைவனது மாட்சிமை உங்கள் மனதில் அறிய வரும்.

நம்பிக்கை இல்லையெனில் அதனை தொடர்வது போலியாகிவிடும்.

 உங்கள் நம்பிக்கை உங்கள் உயர்வுக்கு வழிகாட்டும்!
 இறைவன் , மதம் மற்றும் மார்க்கம் இவைகள் அனைத்தும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையின் ஆணிவேர் . நம்பிக்கை இல்லையெனில் அதனை தொடர்வது போலியாகிவிடும்.  ஆனால் இறைவன்  தேவை என்ற ஒரு நம்பிக்கை மட்டும் அவசியம் தேவைப்படுகிறது. இறைவன்  அவசியம் என்று  நம்பினால்,  இறைவன்  உள்ளதையும்  நம்ப வேண்டும்.
இறைவன் மீது கொண்டுள்ள நம்பிகையும் அவன் மீது வைத்துள்ள பற்றும் உங்களை ஆத்ம திருப்தியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மனித சட்டத்தின்மீது   மனிதனுக்கு மரியாதையும் பயமும் இல்லை. மனித சட்டத்தினை மனிதன் தான் விரும்பிய போக்கில் தனக்கு தகுந்ததுபோல் மாற்றம் செய்துக் கொண்டு வாழ முற்படும்போது பல குழப்பங்களும் அதிருப்தியும் சச்சரவும் ஏற்படத்தான் செய்கின்றது . மனிதன் கொண்டு வரும் சட்டங்கள் இறை நம்பிக்கையுடன் அதன் அடிப்படையில்  இருக்க வேண்டும். எந்த ஒரு மார்க்கமும் தவறு செய்யத் தூண்டுவதில்லை.
இறைவன் மீது  முழு பக்தி கொண்டு, அன்பு, அற வழி வாழ்பவருக்கு எல்லா நாளும்,நன்மை தரும்.

Tuesday 2 June 2015

நம்மை நாம் அறிந்துகொண்டோம்!

நம்மை நாம் அறிந்துகொண்டோம்!
நம்மை மற்றவர் எவ்விதம் அறிந்து கொண்டார்கள் என்பதில்தான் உயர்வே உள்ளது.

நம் அறிவின் ஆற்றல் உயர்வாக உள்ளதாக நாமே ஒரு எடை போட்டுக்கொண்டு அதனை தவறாக செயல்படுத்தும் போது அனைத்தும் விரயமாகின்றது.

பொது வாழ்வில் வந்த பின்பும் பொதுவாக ஒரு கருத்தை வெளியே கொடுத்த பின்பும் அது உங்கள் உரிமையோடு மட்டும் நிற்பதில்லை . மக்களின் விமர்சனத்திற்கு அது உள்ளாகின்றது

திகைக்க வைக்கும் துபாய் -Stunning Dubai

துபாயை அறியாதோர் யாரும் இல்லை. இருப்பினும் நம் மக்களுக்கு வேலை தருவதில் முக்கிய அங்கம் வகிக்கும் நகரங்களில் துபாய் இருக்கும் பொழுது அது நம் நினைவில் வந்துக் கொண்டே இருக்கின்றது , ஏதோ ஒரு வகையில் நம் குடும்பத்தில் உள்ளோர் ஒருவர் அங்கு சென்று வேலை செய்து வருவதனை நாம் அறிவோம்,
எங்கள் குடும்பத்திலும் அதிகம் நபர் துபாயில் அதிகம் உள்ளனர்.

துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெரிய நகரமாகும். அங்கு போதிய அளவு எண்ணெய் வளம் இல்லாததால் துபாய் தன கவனத்தினை வேறு ஒரு வகையை தேடிக் கொண்டு அதில் வெற்றியும் பெற்ற நகரமாக விளங்குகின்றது . ஹாங்காங் போன்று தன்னை ஒரு உலக சந்தை கூடமாக தன்னை உருவாக்கிக் கொண்டது . ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இது மிகவும் பிரசித்திப் பெற்றது. இது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் இஸ்லாமியர் மட்டுமில்லாமல் அனைத்து மார்க்கத்தினை சார்ந்த மக்களும் இங்கு வாழ்கின்றனர்.(இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அனைத்து கேளிக்கைகளுக்கும் அது இடமாகவும் உள்ளது)
இஸ்லாமியர், கிருத்துவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். அனைத்து மத மக்களும் இங்கே நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர்.ஆனால் அரபியர்களைத் தவிர மற்றவர்களுக்கு அது குடிஉரிமை கொடுப்பதில்லை.வெளிநாட்டு முதலீடு பெருக சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்துள்ளது . துபாயைச் சார்ந்த அரபியர்களைக் காட்டிலும் மற்ற மக்களே மிகைத்து அங்கு உள்ளனர்.

Sunday 31 May 2015

தோற்று வைத்தவன் தன் வசமாக்கிக் கொண்டான்!


நீ இறக்கவில்லை
நீ இருக்கிறாய்
நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறாய்

நீ இங்கு இருந்தபோது
உன்னால் பலன் அடைந்தோர்
உனக்காக இறைவனிடம் வேண்டுகின்றார்

உன் பெருமை இங்கு இருந்தபோது இருந்ததை விட
உன் பெருமை நீ இறைவன் வசம் சேர்த்தவுடன் பலவகையாய் உயர்ந்துள்ளது

ஒரு பொருள் கைவசம் இருக்கும்வரை அதன் அருமை தெரிவதில்லை
அப்பொருள் கைவசம் விட்டு நீங்க அதன் அருமை அதிகமாக அறியப்படுகின்றது

உன்னை இறைவன் உலகில் தோற்று வைத்தான்
உன்னை தோற்று வைத்தவன்
உன்னை தன் வசமாக்கிக் கொண்டான்

என்னை சில காலங்கள்
இவ்வுலகில் உலவ விட்டு
என்னையும் உன்னைப்போல்
தன வசமாக்கிக் கொண்டு
உன்னிடத்தில் சேர்த்து வைப்பான்

உன்னை இறைவன் முதலில் தன் வசமாக்கிக் கொண்டது
என்னை உனக்காக இறைவனிடம் வேண்டத்தான்

முற்றிலும் அறிந்த அவன்
முறையாகவே செயல்படுவான்

உனக்காக இறைவனை நான் வேண்ட
அவன் அருட்பெரும் கருணையுடையோன்
அவன் உன்னை உயரிய இடத்தில் சேர்த்து வைப்பான்
ஆமீன். 

Saturday 9 May 2015

அம்மா !அம்மா !


அம்மா !
நீ இறக்கவில்லை
நீ இருக்கிறாய்
நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறாய்
நீ இன்றேல் நான் ஏது !

என்னைப் பெற்று மகிழவே
உன்னை உன் அம்மா பெற்றால்
என்னைப் பெறவே

உன்னை இறைவன் உலகில் தோற்று வைத்தான்
உன்னை தோற்று வைத்தவன்
உன்னை தன் வசமாக்கிக் கொண்டான்

என்னை சில காலங்கள்
இவ்வுலகில் உலவ விட்டு
என்னையும் உன்னைப்போல்
தன வசமாக்கிக் கொண்டு
உன்னிடத்தில் சேர்த்து வைப்பான்

உன்னை இறைவன் முதலில் தன் வமாக்கிக் கொண்டது
என்னை உனக்காக இறைவனிடம் வேண்டத்தான்

முற்றிலும் அறிந்த அவன்
முறையாகவே செயல்படுவான்

உனக்காக இறைவனை நான் வேண்ட
இறைவன் நமக்கு கொடுத்த் அருள்தான்
அவன் அருட்பெரும் கருணையுடையோன்

 Mohamed Ali

Friday 8 May 2015

மாற்றமாய் சிந்தித்தால் ..!

நான் உன்னை விரும்ப ஒரு காரணம் சொல்கின்றேன்
நீ என்னை வெறுக்க பல காரணம் சொல்கின்றாய்

நான் ஒன்றை நினைத்து சொல்ல
நீ மற்றொன்றை நினைத்து சொல்கின்றாய்

****************

சின்ன சின்ன ஆசை!

அழகிய கணவன் அமைய ஆசை
சீர் வரிசை வாங்காத, பணம் கேட்காத மாப்பிள்ளை வீட்டாரும்

அவர்கள் செலவிலேயே நடக்கும் திருமண விருந்தும் நடக்க ஆசை

வெளிநாட்டில் வெண்ணிலவு கொண்டாட ஆசை


வைர கல் மோதிரம் அணிய

Monday 27 April 2015

'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க'


பதினாறும் பெற்றதாய் பெருமை பேசுவார்
பதினாறில் பெண்மகள் பெறவில்லையே யென வேதனைப் படுவார்

'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று
பெருமக்கள் திருமணத்தில் வாழ்த்திச் சென்றனர்

பதினாறில் நன்மக்களும் ஒன்றாகி நிற்க
நன்மக்களைப் பெற்றெடுத்தாலும்
நன்மக்களில் ஒரே ஒரு பெண்மகள் இல்லாமற் போனது
நன்மக்களை பெற்றதில் நிறைவில்லாமல் போனது

Saturday 18 April 2015

உயர உயர பறந்தாலும் இருக்குமிடம் வருவதுதானே இயற்கை

இன்று வாழ்த்துவாய்
நாளை சாடுவாய்
நாளைய மறுநாள் வரவேற்பாய்

இன்றோ
நாளையோ
நாளைய மறுநாளோ
காலமெல்லாம்
உன் ஈர்ப்பில்
என்னை இருக்கச் செய்து விட்டாய்

Friday 17 April 2015

யார் செய்த குற்றம்

அறியாதவளின் அசைவு
அறியாதனுக்கும் ஆட்டம் தந்தது
அறியாதவள் ஆடை உடலோடு ஒட்டி இருக்க
அறியாதவளின் அங்கங்கள் மேடு பள்ளமாய் விளக்கி நின்றது
அறியாதவள் அறிந்துதான் அத்தகைய ஆடையை விரும்பி உடுத்தினாளோ
அறியாதவள் கருப்பு நிற அங்கியை ஆடையை தன் மீது போர்த்தித்தான் கொண்டாள்
அவள் அறியாள் அந்த அங்கியே அவளது அங்கங்களை மேடு பள்ளமாக காட்டிக் கொடுத்து விடுமென்று
அவள் உடுத்திய புறப் போர்வை இருக்கமானதாக் இருந்தது அவளது இதயத்தின் இறுக்கம் போல்
அறியாதவளின் இறுக்கம் யாரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை
இருப்பினும் அவளது உள்மது அறியாது அவளது மூடிய வெளித் தோற்றத்தின் வடிவங்களைக் கண்டு வசீகரிக்கப்பட்டு மற்றவர்களை தடுமாற வைப்பது

இருவரின் எண்ணங்கள் மாறுபட்டிருக்க இணைய வாய்ப்பில்லாமல் போனது
இருப்பினும் அவள் அவ்வாறு இறுக்கமான ஆடையை உடுத்தி வந்ததால் முதல் குற்றம் அவளையே சாரும்

குற்றம் செய்தவனை விட
குற்றம் செய்யத் தூண்டுபவரே முதல் குற்றம் செய்தவர் ஆவார்

உறவுகள்

உறவுகள்‬ வேண்டும்
உறவுகள்‬ உன்னதமாய் இருத்தல் வேண்டும்
உறவுகளில் சிராய்ப்பு வந்தாலும் சரி செய்தல் வேண்டும்

உறவுகள் குருதி வகையில் வந்ததாய் இருக்கலாம்
உறவுகள் சேர்த்தல் வகையாகவும் இருக்கலாம்
உறவுகள் கொடுத்தல் வாங்குதல் முறையாகவும் இருக்கலாம்

உறவுகள் தொடர தொடர்புகள் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும்
உறவுகள் காலங்களை கடந்து இருக்க வேண்டும்
உறவுகள் கன நேரத்தில் முடிந்தும் போகலாம்

உறவுகள் உயிரோட்டமுள்ளதாய் இருத்தல் வேண்டும்
உறவுகள் நெஞ்சத்திலிருந்து  தொடங்க வேண்டும்
உறவுகள் புறத்தோற்றத்தில் வண்ணம் ததததாய் இல்லாமல் இருத்தல் வேண்டும்

உறவுகள் உள்ளத்தை மகிவிக்க வேண்டும்
உறவுகள் நீடிக்க இறைவனின் அருளை வேண்டல் வேண்டும்
உறவுகளின் நலனுக்காக் இறைவனிடம் வேண்டுதல் வேண்டும்

                                           Mohamed Ali


Thursday 16 April 2015

உன் நினைவில் இருக்கச் செய்

இறைவா !
நான் விழித்த போது உன்னை மறந்தேன்
நான் உறங்கியபோது உன் பார்வையில் இருந்ததை மறந்து

நான் சிரிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் அழும்போது உன்னை நினைக்கின்றேன்

நான் மற்றவரை காதலிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் தனித்து விடப்பட்டபோது உன் நினைவில் மூழ்கின்றேன்

எதை எழுதுவது

எதை எழுதுவது
எதையாவது எழுது
எல்லாம் எழுதி விட்டேன்

எதைப் படிப்பது
எதையாவது படி
எல்லாம் படித்து விட்டேன்

அவள் அடுப்பங்கரை அவளுக்கே சொந்தம்
அவள் அடுப்பங்கரையில் அவளது வேலை தொடர
அவளது அடுப்பங்கரைப் பக்கம் வரக் கூடாதாம்

Sunday 12 April 2015

எதைப் பற்றி எழுதலாம்

எதைப் பற்றி எழுதலாம்
அரசியல்
வேண்டாம் பிரச்சனையாகும்
காதல்
அய்யய்யோ அது வேண்டாம்
மார்க்கம்
அதில் தவறு வந்தால் திட்டுவார்கள்
வரலாறு
என் வரலாறே தெரியாது .மற்ற வரலாறு வேண்டாம்
கல்வி
பிழை வந்தால் சிரிப்பார்கள்
குடும்பம்
அது பெரிய குழப்பம். அதுவும் வேண்டாம்
பின் எதை எழுதலாம்!

மோகமும் ,காமமும் ,காதலும் ,இச்சையும் ஆசையும்

மோகமும் ,காமமும் ,காதலும் அற்றவர் பார்க்கும் நிலை அறிது
மனிதன் ஒரு கலவையாகவே படைக்கப் பட்டான்
மோகமும் ,காமமும் ,காதலும் அற்ற நிலையில் உலகம் இயங்காது
மக்கள் பெருக்கம் உருவாகாது
கற்பனைக்கு வயது தடையாக இருப்பதில்லை
கற்பனைக்கு உட்பட்டதுதான் மோகமும் ,காமமும் ,காதலும்
இறைபக்தி உடையோரும் வாரிசுகளை உருவாக்கவே செய்வர்
வாரிசுகளை உருவாக்க மோகமும் ,காமமும் ,காதலும் வேண்டும்
மோகமும் ,காமமும் ,காதலும் முறைபடுத்திய நிலையில் இருத்தல் வேண்டும்
-----------------------

Wednesday 8 April 2015

நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அண்ணனை சிறுவயதிலிருந்து அறிவேன்


நாகூர் ஹாஜி, E.M.ஹனீபா அண்ணனை சிறுவயதிலிருந்து அறிவேன்
அண்ணன் பலமுறை எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார்கள்
அவர்கள் வக்ப் போர்டு சேர்மனாக இருக்கும்போது அவர்களை பார்க்க வக்ப் போர்டு அலுவலகத்திற்கு சென்றேன்
அப்பொழுது நான் எங்கள் ஊர் பள்ளிவாசல் டிருஷ்டியாக இருந்தேன்
அண்ணன் அருகில் அமர வைத்து என்னை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்கள்
அவர்கள் அப்பொழுது எங்கள் சகோதரர்களையும் ,எங்கள் தந்தையும் அவர்களது சேவைப்பற்றி மன நிறைவாக சொன்னார்கள் இன்னும் நிறைய நிகழ்வுகள் அண்ணனைப் பற்றி உள்ளது
-------------------------------------

Tuesday 7 April 2015

ஸல்லல்லாஹ் பாவா/சலவாத் பாவா

 சல்லல்லாஹு அலா முஹம்மது
சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ... !
படம் :மர்ஹூம் சல்லல்லா(சலவாத் பாவா) பாவா
(தலையில் பேட்டா) 
மர்ஹூம் நாஜிர் N.P.முஹம்மது இப்ராஹீம் ஹஜ்ரத்( தலையில் வெள்ளை தொப்பியுடன் )

ஸல்லல்லாஹ் பாவா பற்றித் தெரிந்த விவரங்கள் நிறையவே உள்ளன .ஆனால் அவர்கள் பிறந்தது வளர்ந்தது அவர்கள் குடும்பம் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியாது
நான் அறிந்த வரை சொல்கின்றேன்
நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது அவர்களை பெரியோர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை மிகவும் நேசிப்பார்கள் .அவர்கள் குழந்தைகளை ஸல்லல்லாஹ் ஓதச் சொல்வார்கள் அவரது கையில் ஒரு உண்டியும் பையும் இருக்கும் .ஓதும் குழதைகளுக்கு மிட்டாய் கொடுப்பார்கள் .அந்த சிறிய மிட்டாய்க்கு ஸல்லல்லாஹ் பாவா மிட்டாய் என்றே பெயர் வந்து விட்டது

இதுதான் அரபு நாட்டு வாழ்க்கை

துபாய் மாப்பிள்ளை ,படித்தவர் பெண் கேடகிறாகள் -தாய்
நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் திருமணத்தை நடத்தி விடு பணம் அனுப்புகின்றேன் - தந்தை
இன்னும் பத்து நாட்களில் திருமணம் வைத்தாக வேண்டுமாம் .மாப்பிள்ளைக்கு இரண்டு மாதம்தான் விடுமுறையாம் - தாய்
நல்லது திருமணத்தை நன்றாக ,சிறப்பாக செய் .ஆனால் நான் திருமணதிற்கு வர விடுமுறை கிடைக்காது .-ஸவூதியில் வேலை செய்யும் தந்தை
திருமணம் சிறப்பாக முடிந்தது
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள் கூட இல்லாமல் மனைவியை கர்ப்பமாக்கி விட்டு மாப்பிள்ளை பயணம் சென்று விட்டார்
இரண்டு வருடம் கழித்துதான் குழந்தையை பார்த்தார்
பாட்டன் ஒரு வருடம் கழித்துதான் குழந்தையை பார்த்தார்
ஆனால் இன்னும் மாப்பிள்ளையும் மாமனாரும் இன்னும் சந்திக்க முடியவில்லை வருடங்கள் பல ஓடினாலும்
அவர் வர இவர் இங்கு இருப்பதில்லை
இவர் வர அவர் இங்கு இருப்பதில்லை
பேரன் பேத்திகள் வீட்டில் நிறைவுதான்
இதுதான் அரபு நாட்டு வாழ்க்கை
Mohamed Ali
https://www.facebook.com/nidurali
***************************
Comment பார்த்து சேர்த்துள்ளேன்

Mohd Rafik அத்தா என் வாழ்வில் இதே தான் நடந்தது என் மாமனாரை பாரக்கவில்லை பிறகு அவரும் வபாத்தாகி விட்டார்

Friday 3 April 2015

இறப்பின் காலம் யார் அறிவார் !

இறப்பு எப்பொழுது வரும்
இறக்கும் நேரம் அறிந்திருந்தால்
இறக்கும் நேரத்திலேயாவது நல்லவராக் மாறி விடுவார்
மனிதனை கொலை செய்பவன் இதற்கு விதி விலக்கு
இறப்பின் நுனிக்கு வருபவர்
இறைவா என்னை காப்பாற்று இனி நல்லவன் ஆவேன் என்பர் சிலர்
இறைவன் அருளால் உடல்நலம் பெற்றால் இறைவனுக்கு கொடுத்த வாக்கை மறப்பார்

வட்டிக்கு விடுபவனும் மதுவை விற்பவனும் இல்லாமல் இருக்க வேண்டும்

மது அருந்துபவரைக் காண
மதம் பிடித்து வெறுக்காமல்
மது அருந்துபவரைத் திருத்து
மது அருந்துபவர் திருந்த இறைவனை வேண்டு (துவா செய் )
மது அருந்துபவர் சைத்தானிடம் அடைக்கலம் அடைய வேண்டாதே
குடியை வெறு
குடிப்பவரை வெறுக்காதே
குடிப்பவரும் தொழ வரச் செய்
குடிக்கும் பழக்கம் அவரை விட்டு நீங்க பிரார்தனை செய்ய சொல்லிக் கொடு
குடிப்பவனை விட குடிக்கக் கொடுத்து தொழில் செய்பவன் கொடியவன்
வட்டிக்கு வாங்குவதும் குற்றம்
வட்டிக்கு விடுபவன் பெரிய குற்றம் செய்கின்றான்
வட்டிக்கு விடுபவனும்
மதுவை விற்பவனும்
இல்லாமல் இருக்க வேண்டும்
----------------------------

Tuesday 31 March 2015

வால் வீச்சும் வழி வீச்சும்

 
என் வழியில் நான் போக
உன் வழியில் நீ போனாய்

போகும் வழியை விடுத்து
பார்வையை விழியோடு மோதச் செய்வதேன்
வால் வீச்சில் விழாத நான்
விழி வீச்சில் விழுந்து போனேன்

விழுந்த நான் விழுந்தபடியே கிடக்க
வேறு வழி நோக்கி மறைந்துப் போனாய்

மயங்கியத்தின் காரணம் கேட்கவில்லை மற்றவர்கள்
மயக்கத்தைப் போக்க நற்செயல்கள் செய்தனர்

மயக்கத்தின் காரணம் கேட்டால்
சொல்வது பொய்யாகவே போகும்

வாள் வீச்சில் வீழ்ந்தால் மரணம்
விழி வீச்சில் வீழ்ந்தால் மயக்கம்

மனதை கவரும் மயக்கம் காதல்
மனதை சுண்டும் மயக்கம் மாந்தரின் விழி வீச்சு

விழி பேசும் கண்ணாடி
விழி மயங்கவும் வைக்கும்

வேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும் !

 வேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும்
இறைவனது பொருத்தத்திற்கு ஏற்புடையதா?

இதயம் ஒரு நபரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிடும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள் .ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அவர் சுவனம் செல்வதற்கு தகுதியுடையவராவார்  மற்றும் நிலையாக நிரந்தரமாக வாழ தகுதி அளிக்கப்படும் (சுவனத்தில் மறுவாழ்வு வாழ்வார்) என்பதும் அவர்களது நம்பிக்கை .

  பொதுவாக எல்லா மார்க்கமும் இந்த கொள்கையோடு ஒத்து போகின்றது . இஸ்லாத்தின் கொள்கையில் முக்கியமான அடிப்படை சிந்தாந்தம் முக்கியமானதாக உள்ளது . இஸ்லாம்  ஏகத்துவம் என்ற முக்கிய கொள்கையை அடிப்படையாக தன்னகத்தே கொண்டிருக்கின்றது . ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்வதோடு ஏகத்துவம் ஏன்ற கொள்கையையும் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இதயம் நன்மையான செயல்களுக்கு தூண்டப்படலாம் அது அவன் புகழை நாடி இருந்து இறைவன் அருளைப் பெறுவதற்கு இல்லாமல் இருப்பின் அது இறைவனால் அங்கீகரிக்கப் படாமல் போய்விடும் . அதே நேரத்தில் ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொண்டு நெறி தவறிய வாழ்கை வாழ்ந்தாலும் ஒரு பயனுமில்லை. ஒருவனே இறைவன் அவன் உருவமற்றவன் அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை அவனும் யாரையும் பெறவுமில்லை மற்றும் எங்கும் நிறைந்தவன் அவனே அனைத்துக்கும் அதிபதி என்ற நம்பிக்கைத்தான் ஏகத்துவமாகும் .

Monday 9 March 2015

ஏன் பிரிந்தார்கள்


அவங்க பிரிஞ்சிட்டாங்களா!
ஆமாம் அதுலே என்ன அதிசயம்

திரும்பி சேருவாங்களா !
சேருவாங்க ,ஆனால் சேர்ந்த பிறகு இன்னும் சிலபேரை சேர்த்துக் கொண்டு திரும்பி பிரிஞ்சிடுவாங்க.

ஏன்பா ! இவங்களுக்கு சேருவதும் பிரிவதும்தான் வேலையா அல்லது தொழிலா

இருவர் சேர்வதே இன்னொன்றை உருவாக்கத்தானே
அதுவும் சரிதான்

யாரை திருப்தி செய்வது !

கட்டிய கணவனுக்கும்
பெற்ற பிள்ளைகளுக்கும்
நிறைவு தராமல்
மற்றவர் பாராட்ட
அழகாக உடுத்துவதும்
அதற்கென உயர்வான
ஆடைகளை வாங்குவதும்
கட்டிய கணவனுக்கும்
பெற்ற பிள்ளைகளுக்கும்
நிறைவு தராமல்
சமைப்பதும்
சத்தான ருசியான
உணவைக் கொடுக்காமல்
மற்றவர் பாராட்ட
மற்றவருக்கு சிறப்பான
சத்தான ருசியான
உணவைக் கொடுத்து
பாராட்டுப் புகழை நாடுவதும்
வாழ்விப்பவரை வஞ்சகம் செய்வதாகும்

Sunday 22 February 2015

நேர்மை உயர்வைத் தரும்

நேர்மையை நேசித்தேன்
நேர்மையானவர்களை சந்திக்க முடியவில்லை
நேர்த்தியாகச் சொல்லி பொய்மையை விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்

நேர்மையாக தொழில் செய்தேன்
நேர்த்தியான தொழில் வல்லுனர்கள் உடனிருந்து உதவினார்கள்
நேர்மையும் நேர்த்தியும் புதுமையும் ஒன்றுசேர உயர்வானது உழைப்பு
நேர்மை உயர்வைத் தர
உயர்வின் அருமை
பொறுமையைத் தந்து
மகிழ்வையும் தந்தது

Tuesday 17 February 2015

குற்றங்கள் மறைய சுற்றங்கள் நிறையும்

இன்றைய ஆய்வு
நாளைய தவறு
இன்றைய முடிவு
நாளைய தவறு

சரியோ தவறோ மனம் ஒன்று பட்டு திருமணத்தில்
இணந்து ஒன்றுபட அனைத்தும் சரியாகும் உங்களுக்கும் ஒரு வாரிசு வர

நல்லவளா ,நல்லவரா என்று கண்டறிய காதல் செய்து கண்டபடி நபர்களை மாற்றிக் கொண்டிருப்பது காதல் அல்ல .அது வேடிக்கை பார்க்கும் படமாகிவிடும்

காதலித்துக் கொண்டே இருக்கின்றேன்
காதல் நாட்களுக்குள் அடங்காது
காதல் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்
காதல் சுவனத்தில் நிச்சயிக்கப்பட்டது

செய்த குற்றங்கள் கரு மேகங்களாய்
நிற்கச் செய்து இருள்களாய் சூழ்ந்து விட்டன

தவறுக்கு வருந்தி கண்ணீர் வழியட்டும்
மேகங்களும் குளிர்ந்து மழை பொழிய இருள் நீங்கும்

குற்றங்கள் மறைய
சுற்றங்கள் நிறையும்

சுற்றும் ஆட்சி சுழலும் உலகம்போல்

சுற்றும் ஆட்சி சுழலும் உலகம்போல்

மன்னர் ஆட்சியில் தவறுகள் நிகழ
சர்வாதிகாரி தொடர
சர்வாதிகாரி ஆட்சியில் தவறுகள் நிகழ
பிரபுகள் ((மேற்குடி மக்கள்) ஆட்சிக்கு வர
பிரபுகள் ((மேற்குடி மக்கள்) ஆட்சியில் தவறுகள் நிகழ
மக்களாட்சி மலர்கின்றது
மக்களாட்சி ஆட்சியில் தவறுகள் நிகழ
திரும்பவும் தனி மனிதனின் ஆட்சிக்கு மாறுகின்றது
இது தொடர்நிலையாக சுற்றுகின்றது

நல்லாட்சி நிலையாக இருக்க
மக்கள் நன்மையை பெறும்வரை

தோல்வி தொடர் நிகழ்வல்ல
வெற்றியும் தொடர் நிகழ்வல்ல
வெற்றி ஒருவரோடு நின்றுவிட்டால்
தோல்வி மற்றொருவரை ஊக்குவிக்காது
மாற்றமே உலகின் தொடர்ச்சி

காதல் சந்திப்பு

சந்திக்க
வாய்பிருந்தும்
சந்திக்காமல் நழுவ விட்டேன்

சந்திக்க
வாய்பைத் தேடுகின்றேன்
சந்திக்க
வாய்பைத் தராமல்
நழுவுகின்றாய்

சந்தேகம்
சந்தோசத்தை
சல்லடையாக்கியது

Wednesday 4 February 2015

வாசிப்பது வாழ்வோடு ஒன்றியது


வாசிப்பது பல நிலைகளில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது
வாசிக்கும் திறன் மனித இனத்திற்கு மட்டும் தரப்பட்ட உயர்வு நிலை
வாசிப்பது பல வகையாக உள்ளது
வாசிப்பது தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் இருக்கலாம்
தாய் தனது குழந்தைகளுக்காகவும் வாசிக்க முற்படுகின்றாள்
கற்று அறிந்த ஆசிரியரும் மாணவர்களுக்கு கற்பிக்க வாசிக்க வேண்டிய அவசியமாகின்றது
சிலவற்றை மேலோட்டமாக வாசிக்கின்றோம்
சிலவற்றை ஆழ்ந்து வாசிக்கின்றோம்
சிலவற்றை ஆழ்ந்து வாசித்து நினைவில் நிறுத்திக் கொள்கின்றோம்
சிலர் பொழுதுபோக்கிற்காக வாசிக்கின்றார்கள் அல்லது இரவில் தூக்கம் வருவதற்காக வாசிக்கின்றார்கள்

Monday 2 February 2015

நண்மையான காரியங்கள் நிகழ எந்த மார்க்கமும் தடையாக இருக்கக் கூடாது

நாம் உணர்வுப்பூர்வமாக சாதி, நிறம், மற்றும் மதநம்பிக்கை
அனைத்திலும் தீமை தரும் எல்லையை கடந்து நாம் மனித நேயத்தை நிர்ணயிப்பதிலிருந்து மட்டுமே
நாம் உயர்வு நிலை அடைய முடியும்
.நாம் பின்பற்றும் மார்க்கமும் சிறப்படைய முடியும் .
ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் இரக்கமான சூழ்நிலையை உலகில் கொண்டு வர வேண்டும்
எல்லா நிகழ்வுகளிலும் மனிதன் மதிக்கப்பட வேண்டுமென்ற தகுதியை மனிதர்கள் அனைவரும் பார்க்க வேண்டும். -

Wednesday 28 January 2015

எக்காலமும் பையன்களை அன்பால் மட்டும்தான் திருத்த வேண்டும்

எதையும் தாங்கும் இதயம் இல்லாமல் போனது இளைஞர்களுக்கு
எக்காலமும் பையன்களை அன்பால் மட்டும்தான் திருத்த வேண்டும்

உண்மை நிகழ்வு
மருத்துவ மனையில் கண்டது
தாய் தனது சுமார் பதினேழு மகனை கண்டித்தது
'அடிக்கடி ஏன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கிறாய் '
பையனுக்கு அதனை தாங்கிக்கொள்ள மனமில்லை
பையன் தன்னை மாய்த்துக்கொள்ளும் பொருட்டு 'ஏதோ' உயிரைப் போக்க குடித்து விட்டார்
இள வயது தாய் கதறும் ஒலி மருத்துவ மனையையே அதிரச்செய்தது
மனம் பதைத்தது
மருத்தவர் சேவை சிறப்பாக இருந்தது
ஓரளவு முதலுதவி செய்து நாடி நல்ல வகையில் வந்தவுடன் ஆம்புலன்சில் வேறு பெரிய மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
பையன் மறுவாழ்வு பெற்றிருக்கக் கூடும்
தாயின் கதறலை தாங்க முடியாமல் வந்து விட்டேன்

நினைப்பது ஒன்று நடப்பது வேறு

மகிழ்வான நிகழ்வுகள் ஆயிரம்
சோகமான நிகழ்வுகள் குறைவு
சிலர் சோகமான நிகழ்வுகளையே
அசை போடுவதால் தானும் சிதைய
மற்றவர்களையும் சிதைய வைக்கிறார்கள்

சிறியதை விரும்பினேன்
பெரியதாக கிடைத்தது

பெரியதாக விரும்பினேன்
சிறியதும் சரியாக கிடைக்க வில்லை

எழுதக் கற்றுக் கொண்டு
எழுதியதை தேர்வில் மதிப்பிட்டு மதிப்பெண்கள் போட்டவர் ஒருவர்
முகநூலில் பதிவதை மதிப்பீடு போடுவோர் பலர்
தேர்வில் எழுதும்போது தரம்குறையாது
கேட்டதற்கு பதில் சொல்வதில் சரியாக சொல்வதில் பயம் இருந்தது
முகநூலில் பதிவு செய்வதில் தரமும் பார்ப்பதில்லை
தவறும் பார்ப்பதில்லை
பயமும் கொள்வதில்லை

பார்க்காத நபர்கள் நட்பை நாட
பார்க்காத நண்பர்கள் பாசமாக
பார்க்காத நண்பர்களில் பாசப் பிணைப்பால்
பார்க்க வைக்கும் ஆவலைத் தூண்டுகிறது முகநூல்

முகநூலைப் பார்க்காதவரை
அகநூல் களங்கமற்று இருந்தது

எத்தனை வலைப்பூக்கள்
எத்தனை வலைத்தளங்கள்
அத்தனையும் முகநூலின் வலைக்குள் மாட்டிக் கொண்டன

அகத்தின் அழகு முகத்தில்
முகநூலின் பதிவு மனதின் வெளிக்காட்டல்

அடுத்தவர் வீட்டின் தகவல்கள் தேடல். ஈர்ப்பு (attraction)
சொந்த வீட்டை சரி பார்க்கும் ஆர்வத்தை குறைய வைக்கிறது
 


Sunday 25 January 2015

அறிந்தும் அறியாததுபோல் இருப்பது

டீ விற்பதும்
டீ குடிப்பதும்
புதிய செய்தி அல்ல

இமயமலை உச்சியிலும்
மலையாளி டீ விற்றுக் கொண்டிருப்பார்
வேடிக்கையாக மலையாளிகள் உலகம் முழுதும் இருப்பார்கள்
என்பதற்கு சொல்வதுண்டு

வியாபாரம் செய்ய
அதிலும் இரு நாடுகளுக்குள்
போர் உருவாக்கி ஆயுதம் விற்க
அமெரிக்கா எங்கும் வரும்
எவ்வகையாகவும் வரும்

அமெரிக்கா மற்ற நாடுகளை
ஆசை காட்டி வலையில் விழ வைப்பது
ஆரம்பத்திலிருந்து செய்து வருவதுதான்

உலகமே வியந்து நிற்க உம் மார்க்கத்தை பின் பற்றுவோர் வியக்க வில்லை

அரசனாய் இருந்தாய் இவ்வுலகில்
ஆட்டி வைத்தாய் நாட்டின் நலன் கருதி
அதிகாரம் செய்தாய் மக்களின் உயர்வு நாடி
உயிர் உன்னை விட்டு நீங்க
உமது விருப்பப் படி
அமைதியாக அடக்கி வைத்தனர் புதை குழிக்குள்
அதைத்தான் நீயும் விரும்பினாய்
அதைதான் உன் மார்க்கமும் உனக்கு போதித்தது

உம்மை அடக்கிய விதம் காண உலகமே வியந்து நிற்க
உம் மார்க்கத்தை பின் பற்றுவோர் வியக்க வில்லை
உம்மை அடக்கிய விதத்தில் மார்க்கத்தின் முறை இருப்பதால்
எத்தனையோ ராஜாக்களும் ,நாட்டை ஆள்பவர்களும் வந்திருக்கக்கூடும்
அவர்கள் வரவேண்டுமென நீங்கள் யாரும் காத்திருக்க வில்லை
ஆனால் எங்களில் இறந்த உடலை சிலர் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து வெளிநாட்டிலிருந்து ஒருவர் வருகைக்காக காத்திருந்து அடக்கம் செய்ய பல மணி நேரங்கள் இறந்தவருக்காக தங்களையும் வருத்திக் கொள்வது வேதனைதான்

Saturday 24 January 2015

உணவின் முக்கியத்துவம் அறியாமல் இருப்பது ஏன்?

உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா!
 தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி ...
இறைவன் தந்த அந்த அருட்கொடையான உணவை நாம் அவசர கோலத்தில் சாப்பிடுகின்றோம் .
பல இறக்குமதிகளில் 'பாஸ்ட் புட்' ஒன்றாக சேர்ந்துக் கொண்டது. நொறுங்கத் தின்றால் நூறு  வயது வாழ்வார் என்பது ஆன்றோர் மொழி . மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது.
நாமும் உணவு சாப்பிடும் போது இது இறைவனால் கொடுக்கப்பட்டது என அவனுக்கு நன்றி செலுத்தி மெதுவாக ரசித்து உண்ணும்பொழுது உடல் ஆரோக்கியம் கிட்டும் . 

Wednesday 21 January 2015

வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் விருப்பம்தான்!


  மனிதனுக்கு வேண்டியது இருக்க இடம் ,குடிக்க நீர் , சுவாசிக்க காற்று. இவைகள் அத்தியாவசிய தேவைகள் ஆனால் திருமணம் செய்தால்தான் அவனது வாழ்வு முழுமையடையும்.
  
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல. 

  இக்காலத்தில் வீடு கட்டுவது அனைத்தையும் விட மிகவும் கடுமையான செயலாக இருக்கின்றது. வீடு கட்டுவதற்கு அனைவருக்கும் விருப்பம்தான் அதிலும் திருமண ஆனவுடன் பெண்களுக்கு அதில் நாட்டம் அதிகமாக இருக்கும். அதற்கு வேண்டிய முதல்படியாக இருக்கவே இருக்கின்றது 'தலையணை மந்திரம்'. ஏன் அந்த நாட்டம் வந்தது! வெவ்வேறு இடத்திலிறுந்து வந்த மருமகள்கள் குணத்தில் மாறுபட்டவர்களாக இருப்பார்கள். சகோதரிகளுக்குள்  உள்ள ஒட்றுமை மற்ற பெண்களிடம் இருப்பது அபூர்வம். அதற்குத்தான் சிலரது வழக்கமாக இருப்பது மாமனார் வீட்டோடு மாப்பிள்ளைகள் குடியேறிவிடும் பண்பாடு.   இது கடற்கறையோரம் வாழும் மறைக்காயர்களிடம் உண்டு.

Monday 19 January 2015

வாழ்க்கைக்கு துணையாக திருமணம் செய்துக் கொள்


வாழ்க்கையை கொடுத்தவன் இறைவன்
இணை இணையாக படைத்தவனும் இறைவன்

"நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? மேலும், உங்களை இணை இணையாக (ஜோடி ஜோடியாக)ப் படைத்தோம். உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்; அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்; மேலும், பகலை உங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்ளும் காலம் ஆக்கினோம். உங்களுக்கு மேல், பலமான ஏழு வானங்களை உண்டாக்கினோம்; ஒளி வீசும் விளக்கை (சூரியனை)யும் அங்கு வைத்தோம். அன்றியும், கார் மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்; அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் வெளிப்படுத்துவதற்காகவும், கிளைகளுடன் அடர்ந்த சோலைகளை வெளிப்படுத்துவதற்காகவும்!' (அல்-குர்ஆன் 78: 6-16)

Tuesday 13 January 2015

உனக்குத் தலைவர் உனக்கு வழிகாட்டி அவருக்கு வழிகாட்டியல்ல

 
உனக்குத் தலைவர்
உனக்கு வழிகாட்டி
அவருக்கு வழிகாட்டியல்ல
அவருக்கு அவர் யாரோ

உன்னை பழி வாங்க
உன் மனதை நோகச் செய்ய
அவருக்கு விருப்பம்

அவரை நல்வழிக்கு திருப்பாமல்
உனக்கு வந்த கோபம்
உன் மதியை செயல் இழக்கச் செய்து விட்டது
அதனால் பாதிக்கப் பட்டவர் அவராக இருக்க முடியாது
அதனால் பாதிக்கப் படப் போவது உன்னைச் சார்ந்தவர்தான்

சிந்தனை செய்து
அறிவோடு செயல் பட்டால்
தவறு செய்தவரை திருத்திய நன்மை
உனக்கு கிடைத்திருக்கும்
கோபம் இருப்பவனிடதில்
இரக்கமும் இருக்காது
அறிவும் அகன்று விடும்

உனது உரிமை அடுத்தவர் உரிமையை பாதிக்கக் கூடாது


ஒரு செயலை செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும்
தேர்தலில் நிற்பதாய் இருந்தாலும்
கார்டுன் படம் வரைவதாக இருந்தாலும்
பத்திரிக்கை காரர்களுக்கு மட்டும் தனி உரிமையா!
உனது உரிமை அடுத்தவர் உரிமையை பாதிக்கக் கூடாது
மனம் பாதிக்க அறிவு கெட்டு விடும்

ஒளி தரும் விளக்காய் அமைவது புரிந்துக் கொண்ட கல்வி

விவாதி
விளங்கச் செய்
கற்றுக் கொடு
விவரிப்பதை விடுத்து
அறியச் செய்

மடை திறந்த வெள்ளம் போல்
வார்த்தைகள் சொற்பொழிவுகளால் வரக் கூ டும்
திறந்து விடப்பட்டது பயன் பெற வேண்டும்
அருவிகளாய் நீர் கொட்டலாம்
அருவிகள் எவ் வகையில் பயன் பெற்றது என்பதே முக்கியம்

மார்க்க சட்டங்கள்
நாட்டின் சட்டங்கள்
நிறைந்து இருக்க
சட்டத்தின் நன்மைகளை கற்பிக்க வேண்டும்
சட்டத்தினை பேணுதல் இல்லாமல் போனவன்
சட்டத்தின் நன்மைகளை அறியாமல் போனவன்

இருப்பதும் போவதும் இதயத்தை வாட்டுகின்றது


இல்லை என்பது குற்றமில்லை இல்லாதவரை
இல்லை என்பது குற்றமாகிவிட்டது
இருப்பதை இல்லை என்று சொல்லிவிடுவதால்

இருந்துக்கொண்டே இல்லையென்று சொல்லச் சொல்கின்றாய்
இருந்துக்கொண்டே இருப்பேன்
இரு வருகிறேனென்று சொல்லும்வரை

இயலாததையும் இயல வைப்பேன் நீ இருக்கும்வரை
இய்லாதவனாகி விடுவேன் நீ இல்லாத நிலை வர
இருந்துக்கொண்டே இரு நான் இருக்கும்வரை

Saturday 3 January 2015

பாசம் அறியா தொடர்புகள்

உன்னைக் கண்டித்து வளர்த்தேனே !
என்னைக் கண்டித்ததால்தான் கெட்டுப் போனேன்

உன்னைப் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கினேன்
என்னைப் பெற்றதால் அது உனது கடமையானது

உனக்கு உரிமை கொடுத்து நீ காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைத்தேனே
எனது உரிமையை தடுத்தால் உன்னை ஒதுக்கி திருமணம் செய்துவிடுவேன் என்ற பயம் உனக்கு

ஏன்! இப்படியெல்லாம் பேசுகின்றாய் !
உன் அப்பனிடம் நீ பேசியதைப் பார்த்து நான் கற்றுக் கொண்டதுதான் 
*****************************

ஆய்வு மேல் ஆய்வு செய்கின்றான் ஆகாயத்தில் அடுத்தவர் வாட காணாமல் போகின்றான்


தன்னோடு இருப்பவள் குழந்தைப் பெற தகுதி இருந்தும்
தனக்கு பிள்ளைவேண்டுமென்ற நோக்கோடு
வாடகைக்கு பிள்ளைப் பெற்றுத் தர (வாடகைத்தாய்)மற்றவளை நாடுகின்றான்

தன்னிடமுள்ள அழகை தானே அறியாமல்
பிறரிடமுள்ள அழகைக் காண அவனை விளம்பரத்திற்கு நாடி அலைகின்றான்
தன்னிலை தானே அறியாமல் அடுத்தவனைக் காண ஆர்பரிக்கின்றான்
(ஆர்பரின் -அதிருப்தியால் ஏற்படக்கூடிய பின்னடைவை சீர்படுத்த தீவிர முயற்சி)
தன்னிடமுள்ள வளத்தை வைத்து வாழ வழி வகுக்காமல்
உலகமெல்லாம் ஓடி உதவி நாடுகின்றான்
என்ன இல்லை நம் நாட்டில் என்று அறியாமல்
அடுத்தவனிடம் அடிமையாகி தன்னை வளர்த்துக்கொள்ள விரும்புகின்றான்

ஆய்வு மேல் ஆய்வு செய்கின்றான் ஆகாயத்தில்
அடுத்தவர் வாட காணாமல் போகின்றான்
இருப்பதைப் பெருக்கி
இல்லாதவரிடம் கொடுக்க
வையகம் வந்த மெய்மை உயர்வடையும்

நமக்காக சேர்த்தது நம்மிடமில்லை !

 
 
நீ பிறந்தது எனக்காக
நான் பூக்கள் வாங்கியதும் உனக்காக
நாம் பிள்ளைகள் பெற்றதும் நமக்காக

சொத்துகள் சேர்த்ததும் பிள்ளைகளுக்காக
மகன்கள் பிரிந்து சென்றதும்
மகன்கள் மனைவிகள் விரும்பியதற்காக

சேர்த்த சொத்துகள் நம்மை விட்டு போனதும் மகன்களுக்காக
சேர்த்த சொத்துகள் நம்மை விட்டு போனதும்
சொத்துகளை மகன்கள் பெயரில் எழுதி வைத்தமைக்காக
சொத்தோடு நகைகள் போனதும் மகன்களுக்காக வரதட்சணை வாங்கியதர்க்காக

ஒதுங்கினால் ஒதுக்கி விடுவார்கள்


ஒதுங்கினால் 
ஒதுக்கி விடுவார்கள்
பிரபலம் ஆவதும் நம்மால்தான்
பிரபலங்கள் ஆவதும் நம்மால்தான்

பிரபலங்கள் ஓரிடத்தில் நிற்காது
பிரபலங்கள் ஓரிடத்தில் நின்றால்
பிரபலமாவது தடைப் படும்
பிரபலமாவதற்கு தடையை உடைக்க வேண்டும்
போரில் ஈடுபடுபவனுக்கு
போட்டியில் ஈடுபடுபவனுக்கும்
தாழ்மை உணர்வும்
இறக்க சிந்தனையும் இருப்பதில்லை

என்னால்தான் பிரபல்மானாய் என்றால்
என்னோடு சேர்ந்ததால்தான் பிரபலமானாய் என்பர்