Sunday 22 February 2015

நேர்மை உயர்வைத் தரும்

நேர்மையை நேசித்தேன்
நேர்மையானவர்களை சந்திக்க முடியவில்லை
நேர்த்தியாகச் சொல்லி பொய்மையை விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்

நேர்மையாக தொழில் செய்தேன்
நேர்த்தியான தொழில் வல்லுனர்கள் உடனிருந்து உதவினார்கள்
நேர்மையும் நேர்த்தியும் புதுமையும் ஒன்றுசேர உயர்வானது உழைப்பு
நேர்மை உயர்வைத் தர
உயர்வின் அருமை
பொறுமையைத் தந்து
மகிழ்வையும் தந்தது
உயர்வின் அருமையை அறிந்தோர்
உயர்வை தன்னிலைக்கு பெற்றிட விரும்பினர்
உயர்வை விரும்பியது ஆற்றாமையால்
உயர்வைத் தேடியது பொறாமையால்

உயர்வான பொருளன்று
மாற்றான கலப்படத்தை கலந்து விற்றனர்
நேர்மையை விலையாக்கி
நேர்மையை நெஞ்சத்தை விட்டகற்றினர்
அறியாத மக்கள் அவர்கள் பக்கம் அலையாக குவிய
நேர்மையற்றோர் குவியலாக பணத்தை சேர்த்தனர்
குவியலாக சேர்த்த பணமும்
தொடர்வாக வந்த வியாதியால்
குவியலாக சேர்த்த பணமும்
மருத்துவரிடம் குவியலாகப் போய்ச் சேர
பொய்மையான நேர்மையற்ற வாழ்வுக்கு
பொய்யான இடத்தில் பரிகாரம் தேடி அலைய
மனதும் கெட்டு
மானமும் கெட்டு
தொழிலும் கெட்டு
நேர்மையின் மேன்மையை அறிந்து
உண்மையை உயர்வாய் நினைத்து
உள்ளத்தால் திருந்தி
வேதனையை செப்பி மன்னிப்பு நாடினர்
பாதகம் சேயவித்தோரிடமும்
ஆண்டவனிடமும் மன்னிப்பை நாடி வருந்தி வேண்டினர்
இறைவனின் அருளால் நல்வாழ்வும் பெற்றனர்

No comments:

Post a Comment