Sunday 12 April 2015

மோகமும் ,காமமும் ,காதலும் ,இச்சையும் ஆசையும்

மோகமும் ,காமமும் ,காதலும் அற்றவர் பார்க்கும் நிலை அறிது
மனிதன் ஒரு கலவையாகவே படைக்கப் பட்டான்
மோகமும் ,காமமும் ,காதலும் அற்ற நிலையில் உலகம் இயங்காது
மக்கள் பெருக்கம் உருவாகாது
கற்பனைக்கு வயது தடையாக இருப்பதில்லை
கற்பனைக்கு உட்பட்டதுதான் மோகமும் ,காமமும் ,காதலும்
இறைபக்தி உடையோரும் வாரிசுகளை உருவாக்கவே செய்வர்
வாரிசுகளை உருவாக்க மோகமும் ,காமமும் ,காதலும் வேண்டும்
மோகமும் ,காமமும் ,காதலும் முறைபடுத்திய நிலையில் இருத்தல் வேண்டும்
-----------------------
இச்சையென்று எச்சல் துப்புவோர்
இச்சையென்று அறிந்தும் செயல்படுவார்
------------------

சேர்த்து வைத்த இந்திரியம்
போக்கிடமின்றி தவித்து நிற்க
அனலாய் உடலில் மாற்றம் காண
கனவில் வந்த கன்னி களிப்பைத் தர
கன நேரத்தில்
அனலாய் இருந்த உடலை
மருந்தாய் வந்து மாற்றம் தரும்

மனதில் தோன்றும் ஆசைகள்
கனவாய் காட்சி கொடுக்க
கனவும் மாந்திரீகமென
கன்னி ராசியென
மந்திரம் சொல்வோர்
போற்றித் திரிக்கின்றனர்

No comments:

Post a Comment