Saturday 31 October 2015

காலத்தின் மாற்றம்,

நாம் வாழும் காலம் மறுமலர்ச்சி காலம், இங்கு என்ன புரட்சியா நடந்துவிட்டது? எகிப்தில் கமால் பாட்சா புரட்சி வழி கொண்டு பெண்களுக்கு உரிமை கொடுத்து மாற்றம் கொடுத்தார் . இஸ்லாம் அனைத்து உரிமையும் பெண்களுக்கு தந்திருந்தபோதும் அதனை முறையே பயன்படுத்தாமல் ஒரு சிலரின் தவறான பிரசங்கத்தினால் பெண்களை கல்வி கற்க விடாமல் செய்து வீட்டிற்குள் முடக்கி விட்டோம். தற்பொழுது அந்த நிலையில் மாற்றம் வர பெண்களும் உயர் கல்வி பெற்று வருகின்றனர்.

கல்வி பெற கல்லூரி சென்றால் கெட்டுவிடுவார்கள் என்ற தவறான பிடிவாதத்திலிருந்து இப்பொழுதுதான் மீண்டு வருகின்றோம். மறுமலர்ச்சி காலத்தில் ஒரு சில தவறு நடக்கத்தான் செய்யும் அதற்காக அனைத்துமே தவறாகி விடும் என்ற முடிவுக்கு வருவது மூடத்தனம்.காக்காய் அனைத்துமே கருப்பல்ல பல நாடுகளில் வெள்ளை காக்கைகள் உண்டு. ஒரு சிலர் பாடசாலைக்கு வரும்போது தர்ணாவில் ஆரம்பிக்க அது அனைவருக்குமே உடந்தையானது என்ற முடிவுக்கு வர வேண்டாம்.
இலட்சத்தில் ஒரு பெண் ஓடிபோனால் அதற்காக அனைத்துப் பெண்களும் ஓடிப்போவார்கள் என்ற முடிவுக்கு வந்தால் ஒருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடியாது . உலகமே நிலை தடுமாறி விடும்

No comments:

Post a Comment