Monday 15 August 2016

நிம்மதியான தூக்கம்

ஆய்வின்படி விடிகாலை (பஜர் தொழுகை) நேரம் உடலுக்கு ஆரோக்யமானது
இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை
தூக்கம் நமக்கு கிடைத்த இறைவனது அருட்கொடையில் மிக முக்கியமானது .
குழந்தையின் தூக்கம் கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.காரணம் பிறந்த குழந்தைக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகின்றது
தூக்கம் நமது இழந்த சக்தியினை மீட்டு அடுத்த நாள் உழைக்க பலுவினை தருகின்றது .
சிலருக்கு தூக்கம் குறைவாக இருக்கலாம் அதனால் அவர் அதற்காக அதே சிந்தனையில் இருக்கக்கூடாது .அந்த எண்ணம்தான் அவர் உடல்நிலையினை மிகவும் பாதிக்கும்.. தூக்கம் இல்லாமல் எந்த மனிதனும் வாழ முடியாது . நிம்மதியான தூக்கம் இல்லை என்றாலும் அவரை அறியாமல் பூனைத் தூக்கம் அவருக்கு கிடைத்திருக்கும் .

மனிதனுக்கு ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நேரத்தில் அது கிடைக்கலாம் . கிடைக்கும் நேரத்தினை பயன் படுத்திக் கொள்ளட்டும். பகலில் உணவுக்கு முன் பூனைத் தூக்கம் போடுவது நல்லதுதான்.
கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை
சிலர் நல்ல தூங்கு மூஞ்சியாக இருந்து காலத்தினையும் உடலையும் கெடுத்துக்கொள்வர். அவர்களுக்கு தூக்கம்தான் வாழ்க்கை .
8 மணி நேர தூக்கம் போதுமானது .
பால்காரர்களும் பேப்பர்காரர்களும் ஓசோன் காற்றை சுவாசிப்பதால்தான் அவர்களால் வேகமாக செயல் பட முடிகின்றது . காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.
தூய்மையான அதி காலை காற்று உடல் நலத்துக்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும் போது சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் ஒரு உற்சாகம் அது மிகவும் உயர்வானது
மிதமிஞ்சிய பேச்சு, உணவு, தூக்கம் ஆகியவற்றின் காரணமாக அவலநிலையும், அழிவு நிலையும் ஏற்படுவதால் நபி வழியில் ஷரீஅத் சட்ட ஒளியில் நாம் முதலில் நடந்து, பிற சமுதாயத்தினரும் இப்பேருண்மையை ஏற்று குற்றமற்ற நிம்மதி நிறைந்த உலகைப் படைக்க முயற்சிப்போமாக, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

No comments:

Post a Comment