Thursday 11 January 2018

ஹஜ்ரத் S.R.S.ஷம்சுல்ஹுதா


 ஹஜ்ரத் S.R.S.ஷம்சுல்ஹுதா




பள்ளிவாசளில் பொதுவாக மார்க்க சொற்பொழிவு செய்வோர் நல்ல மார்க்க அறிவு பெற்றவராகவே மற்றும் இறைபக்தியுடையவராக  இருப்பார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. நான் கேட்டதும் அதனால் பெற்ற ஞானமும் அவர்கள் ஆற்றிய  சொற்பொழிவினால் கிடைத்த பெரும் பயன்தான். சம்சுல்ஹுதா ஹழ்ரத்  அவர்கள்  நீடுர் -நெய்வாசல்  பெரிய பள்ளிவாசல்  இமாமாக இருந்து சிறந்த சேவைகள் செய்தார்கள். அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் மறக்க முடியாதாவைகளாக எக்காலத்திலும்  மனதில் நிலைத்து நிற்கக் கூடியதாக  இருப்பதனை அனைவரும் அறிவார்கள். அவர்கள்போல் இன்னும் பல மார்க்க அறிஞர்களும் இருக்கின்றனர்.
      சம்சுல்ஹுதா ஹழ்ரத் அவர்களின் சொற்பொழிவு யார் மனதையும் புண்படுதுவதில்லை. குறித்த நேரத்தில் தனது உரையை முடித்துக் கொள்வதில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் தலைப்புக்கு தகுந்ததுபோல் பேசுவது அவர்களது இயல்பு . முன்னுரை ,தெளிவுரை , கருத்துரை ,எப்படி இருக்க வேண்டும் என்பதில்   முக்கியம் கொடுத்து பேசுவதற்கு தன்னை தயார் செய்துக் கொள்ள அதிகமாகவே படிப்பார்கள். அவர்களது ஜும்மா பிரசங்கத்தில் குரான் வசனங்களும் அதன் விளக்கங்களும் அதற்கு தகுந்ததுபோல்  ஹதீஸ்களும் ( நபிமொழியும்) நிறைந்து நிற்கும்.முடிவுரையில் தனது கருத்தினை அதற்கு ஏற்றதுபோல் இஸ்லாமிய நெறியோடு ஒரு விளக்கத்தினை தந்து முடிப்பார்கள். அவர்களது  சொற்பொழிவினை கேட்ட பின்பு இறைபக்தி நம் மனதில் வந்து ஒட்டிக்கொள்ள அந்த இறைவனது அருள்நாடி அவனை தொழ ஆரம்பிப்போம்.அந்த தொழுகையில் மனமொன்றி தொழுது நிற்போம். மன அமைதி கிடைக்க உள்ளம் உவகையடைய  அதனால் ஆத்ம திருப்தி ஏற்படும்.

மர்ஹூம் ஹஜ்ரத் S.R..S.ஷம்சுல்ஹுதா அவர்கள்  நீடூர் - நெய்வாசலில் பல ஆண்டுகள் நீடூர் - நெய்வாசல் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் நாஜிராகவும்(முதல்வராக) நீடூர் நெய்வாசல் ஜாமியா மஸ்ஜிதில் தலைமை இமாமாகவும் இருந்து சிறந்த சேவை செய்தார்கள். ஹஜ்ரத் அவர்களின் சொந்த ஊர் வடக்கு மாங்குடி

---------------------

     காலம் மாறிவிட்டாலும் அந்த உயர்ந்த செயல்பாட்டு முறையே சிறந்தது. அரசியல் பேசுவதும் , அறிவுரைகள் சொல்லும் எண்ணத்தோடு ஒரு சாராருக்காக பேச முனைந்து  அடுத்தவர்கள் மனதை புண்பட வைப்பதும் ஒரு காலமும் சிறப்பான சொற்பொழிவாக  இருக்க முடியாது. ஜும்மா மேடை அரசியல் மேடையாக மாறிவிடக் கூடாது  அது குழப்பதிற்குத்தான் வழி வகுக்கும். மனதைத் தொடக்கூ டியதாக,உள்ளத்தை வருடிவிடக்கூடியதாக மார்க்கதின்மீது பற்று வரும்படியதாக பேசுவது சாலச் சிறந்தது. குறையை காணாமல் நிறையைக் காண முயற்சித்து மக்களை உயர்த்த வழிக்கு திருப்ப அன்பான வார்த்தைகளோடு,சிறந்த மார்க்க விளக்கங்களோடு சிறந்த சொற்களைப் பயன்படுத்தி மக்கள் மனதில் ஆழமாக பதியும் படி மார்க்க விளக்கங்கள்  அடங்கிய பிரசங்கங்கள் அமைய வேண்டும. அதற்கு பேசும் மொழி வல்லமை மற்றும் சிறந்த உலக அறிவும் இன்றியமையதாக தேவைப் படுகின்றது. உங்கள் கடமையினை  முறையாக செய்து விடுங்கள்.மற்றதனை இறைவனிடம் விட்டு விடுங்கள்  ஒரு தலைப்பு வைத்து பேசுங்கள். தொடர்ந்த சேவை இன்ஷா அல்லாஹ் நல்ல பயனைத் தரும். தேவையில்லாமல் 'மற்றவர்கள் பேசுவது  தவறானது மார்கத்திற்கு புறம்பானது' என்ற வாதத்திற்கு வழி வகுத்து 'அவர் என்ன சொன்னார்?' அவர் சொன்னதில் தவறு உள்ளதா! அல்லது அதில் ஒன்றும் தவறில்லையே!  என்பது போன்ற சிந்தனைக்கு இடமளிக்க  நீங்களே முக்கியம் கொடுத்து விடுகின்றீர்கள். நீங்கள் சொல்வது உயர்வாக உண்மையாக இருந்து அது மக்களை இறை நாட்டத்தில் ஈடுபட வைத்தால் அதுவே சிறப்பானது .
 ----------------------------------------------------------------------    

"சலவாத் பாவா" பற்றி S.R.S. ஹஜ்ரத் .ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்கள்  சொற்பொழிவு.

ஹதீஸில் என் மீது ஒரு தடவை ஸலவாத் கூறினால், அல்லாஹ் உங்கள் மீது பத்துத் தடவை சலவாத் கூறுகிறான் (மன்னிக்கிறான், அருள் புரிகிறான்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாவும் உள்ளது.


கஞ்சன் என்பவன் யார்தெரியுமா? யார் என்பெயர் கூறப்படும்போது என்மீது சலவாத் சொல்லவில்லையோ அவன்தான் கஞ்சன் என்று நவின்ரார்கள் :- அறிவிப்பவர் : செய்யிதின அலி (ரலியல்லாஹு அன்ஹு) ஆதாரம் :- திர்மிதி, அஹ்மத்

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

பொருள்: இறைவா! இப்றாஹீம்(அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப்போல், முஹம்மது அவர்களின் மீதும், முஹம்மது அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

"சலவாத் பாவா" பற்றிஅறியாதவர்கள் தமிழ் நாட்டில் யாருமில்லை . அவர்களுக்கு அனைவரும் மரியாதை கொடுத்து வந்தார்கள்.
"சலவாத் பாவா"வினைக் கண்டால் சிறார்கள் மிகவும் மகிழ்வார்கள் . அவர்களுடன் ஒரு மிட்டாய் டின் இருந்துக் கொண்டே இருக்கும் .அந்த மிட்டாய்க்கு "சலவாத் பாவா" மிட்டாய் என்ற பெயர் வந்து விட்டது .அந்த மிட்டாய்களை சலவாத் சொல்லச் சொல்லி அனைவர்க்கும் கொடுத்து மகிழ்வார்கள். எக்காலமும் அவர்கள் நாயகம் பெயரில் சலவாத் சொல்லிக் கொண்டே இருப்பதுடன் மற்றவரையும் சலவாத் ஓதச் சொல்லி உற்சாகப்படுத்தி வந்தமையால்தான் "சலவாத் பாவா" என்ற பெயர் அவர்களுக்கு வந்தது.

S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின்,அறிவியல் ரீதியிலான சொற்பொழிவு, அல்லாவின் உயரிய படைப்பின் பார்வை,உயரினங்களின் உண்ணதம், S.E.A. Mohamed Ali Jinnah,Nidur. S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

No comments:

Post a Comment